Thursday, November 26, 2009

விஜய் சொந்தமாக டிவி தொடங்க விண்ணப்பம் செய்துள்ளார். சுமார் பதினைந்து கோடி தேவைப்படுவதால் ரசிகர்கள் தலா ஆயிரம் வீதம் ஒன்னரை லட்சம் பேர் தருமாறு அன்பு கட்டளை போட்டுள்ளார் . அப்போதுதான் கேபிள் ஆப்பரேட்டேர் சேனல் கொடுக்காவிட்டாலும் , தெளிவாக இல்லாவிட்டலும் அவர்கள் கேட்பார்கள் என்பதால் எந்த முடிவு செய்துள்ளார்.

அப்பா சேனல் பெயர் என்ன விஜய் டிவி ன்னு வைக்க முடியாதே .

அஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்

வாலி , அமர்க்களம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , தீனா என்று உச்சத்தை நோக்கி பறந்த அஜீத் எல்லார் மனதிலும் இடம் பிடித்தார் மேலும் பூவெல்லாம் உன் வாசம் எலோருக்கும் பிடித்த குடும்ப படம் .

ஹிந்தியில் ஷாருக்குடன் அசோகா என விறு விறு வென வளர்ந்தார் .

மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்க தொடங்கினர் .

அவர் நடித்த ரெட் அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்தது இந்த படத்தை பற்றி சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் தெரியும் . அஜித்துக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது ,தொடர்ந்து வந்த ராஜா சுமார்.

இன்று கூட பலரும் வாலி வரை அஜித்தான் பிடிக்கும் ரெட் வந்த பிறகு பிடிக்காது என்று சொல்வார்கள் .இத்தனை அடுத்து வந்த வில்லன் கொஞ்சம் பழைய பெயரை கொடுத்தது.

பிறகு தான் அவர் நடித்த ஆஞ்சனேயா மீண்டும் ரசிகர்களை சோதித்து பார்த்தது அடுத்து வந்த ஜனா ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பை பெற்றது ரெட்-யை விட பலத்த சறுக்கல் அஜித்துக்கு . இன்று வரை யாரும் பொறுமையாக முழுதும் பார்க்கமுடியாத படம் . இடையிடையே சுமாரான படங்களை கொடுத்தார் .



அடுத்து வந்த அட்டகாசம் மீதம் இருந்த ரசிகர்களுக்கு தீனி போட்டது , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அடுத்து வந்த ஜீ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .
அதற்கப்புறம் வந்த திருப்பதி திருப்தி கொடுத்தது ,

அடுத்து வந்த வரலாறு அஜித் முன்னேற வழிவகுத்தது , தீபாவளிக்கு வந்த ஆழ்வார் படம் போக்கிரி . தமிரபாரணி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கமுடிய வில்லை .

அடுத்து வந்த பில்லா மெகா ஹிட் இழந்த ரசிகர்களை மீது அஜித்துக்கு கொடுத்தது , தமிழில் இதுவரை வந்த ஸ்டைல்இஸ் படம் இது மட்டும்தான் . ஏகன் சுமாராக போனது .


அஜித் மட்டும் ரெட் , ஜனா ஆகிய படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் ரஜினிக்கு அருகே சென்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Tuesday, July 21, 2009

ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே போஸ்டர்கள் அச்சிட்டும் கூட்டங்களில் தீர்மானம் போட்டும் ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினியோ ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதன்படி நடக்கும் என்று சொல்லி பிடி கொடுக்காமலேயே நழுவுகிறார்.

இரண்டு தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்தார். பின்னர் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். என்றாவது ஒருநாள் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:-

என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.

அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்

Monday, July 20, 2009

ஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.தி.மு.க., முடிவு: குன்னூர் கூட்டத்தில் தீர்மானம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேனி மாவட்டம் கம்பம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மனு தாக்கல் நாளை மறுதினம் (22ம் தேதி) துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 21ம் தேதி நடக்கிறது.



இடைத்தேர்தலில் களமிறங்க அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் அவசர செயற்குழு கூட்டம் இன்று குன்னூரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் குன்னூர் விவேக் ஓட்டலில் மதியம் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன், முக்கிய நிர்வாகிகளை ஜெயலலிதா கொடநாட்டில் காலை 10 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எப்படி சந்திப்பது, ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட விஷயங்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை புறக்கணித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்ட்டது.



நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என குன்னூரில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டததில் தீர்மானம் நி‌‌றைவேற்றப்பட்டது.

இந்த வலை பக்கம் பொய் பாருங்கண்ணா

(http://jaiindia2020.blogspot.com)



Saturday, July 18, 2009

வெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி

ஒரு கமெடி படம் பாக்கலான்னு நம்ம காந்திபுரம் குமரன் தியேட்டேர் ல வெடிகுண்டு முருகேசன் பார்க்க மாலை காட்சி போனேன் நண்பன் சிவா வுடன் . கூட்டம் சுமாராக இருந்தது , இப்ப படத்துக்கு போகலாம்


பசுபதி கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் . அவர் ஒரு வலிப்பு நோயாளி வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் . அலெர்ட் ஆறுமுகமாக வந்து வடிவேலு சிரிக்கவைக்கிறார், பெண் போலீஸ் வேடத்தில் ஜோதிர்மயி . சீருடையில் நோட்டை குத்தி பாடல் பாடி காவல் துறை பெண் காவலர்களை கேவலபடுத்துகிறார்.

குடித்துகொண்டே பசுபதி பள்ளியில் தன்னுடன் படித்த பெண் மனநோயாளியை கப்பற்றிவருகிறார். தண்ணி அடித்து , சாராயம் தனக்காக காய்ச்சி போலீஸ் கையில் மாட்டுகிறார், ஹோம் மேட் சரக்கு ஒடம்புக்கு நல்லது என்று விளக்கம் வேறு.

பசுபதி மெசேஜ் சொல்லி வெறுப்பேற்றுகிறார் , எப்போதாவது வந்து வடிவேலு உற்சாகமூட்டுகிறார், ஜோதிர்மயி அழுது வெறுப்பேற்றுகிறார் , பாடல்கள் தினா இனிமே இப்படி வீனா போடதீங்க .


வில்லன் அந்த மனநலம் குன்றிய பெண்ணை கெடுத்து விடுகிறான் , அதை கண்டுபிடித்த பசுபதி சண்டையில் வில்லன் தடுக்கி விழுந்து அவன் கை ஆயுதத்தாலேயே சாகிறான் . இதனால் பசுபதியை அவனின் அண்ணன் கொள்ள வருகிறான் , பிறகு அந்த பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது , பிறகு வழக்கம்போல் சமாதனம் ,


ஒரு நல்ல காமெடி படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வீணடித்திருக்கிறார் கள் . பெயரை மெசேஜ் முருகேசன் அல்லது அலெர்ட் ஆறுமுகம் என வைத்திருக்கலாம் , எப்போதும் அழுது வடியும் பசுபதி ஏன்டா வந்தீங்க கேட்கிறார்


வடிவேலுவை இன்னும் சிறப்பாக அதிகமாக பயன்படுத்தி இருந்தால் நல்ல காமெடி படமாவது கிடைத்திருக்கும்.

வெடிகுண்டு முருகேசன் அல்ல வெறுப்பேற்றும் முருகேசன் .

என் நண்பன் சிவா சொன்ன கமெண்ட் இந்த படம் பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா ,









Friday, July 17, 2009

நீலகிரி மழையில் மிதக்கிறது

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,455 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதில் அதிகபட்சமாக அப்பர்பவானி பகுதியில் 501 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 454 மி.மீ, கூடலூரில் 329 மி.மீ, எமரால்டில் 283 மி.மீ, கிளன்மார்கனில் 267 மி.மீ, நடுவட்டத்தில் 190 மி.மீ, தேவாலாவில் 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய நீர்த்தேக்கங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனத்த மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்தது.தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் அமராவதி அணைக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென வேகமாக உயர்ந்து வருகிறது.

அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி



காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற கிராமத்தில் 1919-ஆம் ஆண்டு இந்த இசைத் தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர். தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும் கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால் அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி அருண்டேல்.

இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான் அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை, கீதம், வர்ணம் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையில் வரும் நிரடான பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம் செய்தன.லய சாம்ராஜ்யத்தை கட்டி நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம் பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார்.

ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ் பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல் சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை பல்வேறு விருதுகளையும் பெற்றார்.கர்நாடக சங்கீதத்தில் லட்சியம், லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச் சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர் அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும் தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார்.

சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்; அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத் தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.வராளி ராகத்தில் தியாகராஜரின் "ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி. பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா இது ராமா'' என்று ஏங்கித் துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை வராளியின் ஜீவன் பொங்கி வழியத் தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம் பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல் நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி இந்த சங்கீத ரசவாதத்தை யார் நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப் பாடிக் கேட்கப் போகிறோம்?கடந்த நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள் கர்நாடக இசை மேடைகளில் கானமழை பொழிந்தனர்.


."நாம் இருவர்' திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில், சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது .

Wednesday, July 15, 2009

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்

"குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுவது, சட்டப்படி குற்றம். குடிபோதையில் வாக னத்தை ஓட்டக் கூடாது...' இதுபோன்று அரசு மற்றும் போக்கு வரத்து போலீஸ் வட்டாரம் அறி வுறுத்துகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தவறு செய்பவர்கள் திருந்துவதாக இல்லை. இதற்கு சாட்சியாக விளங்குவது மதுக்கடை மற்றும் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களே.


சரக்கை ஏற்றிக் கொள்ள வாகனத்தில் வருபவர்கள், போதையுடன் வெளியே வந்து வண்டியைத் தள்ளிக் கொண்டா போவர்! குறிப்பாக, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், சமயங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாவதையும் கண் கூடாக பார்க்கலாம்.


குடிபோதையில் இருவர், மூவராக பைக்கில் ஏறி, பெரும் இரைச்சலுடன் ஓட்டுகின்றனர். இவர்களை பார் வாசலிலேயே கண்காணித்து, வெளியில் வந்து வாகனத்தை எடுத்தவுடன் கையும், களவுமாக பிடிக்கலாம்.


இதை தடுக்க வேண்டுமென்றால், வாகனத்தை பறிமுதல் செய்யலாம் அல்லது தண்டனையை அதிகரிக்கலாம். அப்போதுதான், சாலையை உபயோகிக்கும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு நேராது.

Tuesday, July 14, 2009

கல்வி , கட்டணம், கற்றவர் கடமை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்ட ணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டி ருப்பது இப்பொழுது தமிழகத்தில் ஒரு பெய பிரச்னையாக உருவெடுத்துள் ளது. இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத் தில் ஒரு பொதுநல வழக்கும் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தனி யார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க தமிழக அரசு, குழு அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள் ளது. தனியார் பள்ளி பிரச்னை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதைப் பற்றி பல விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ""பிரதம்'' என்ற அமைப்பு ""ஊரகப் பகுதி களில் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை'' என்ற ஓர் அறிக்கையை அகில இந்திய அளவில் வெளியிட்டு வருகிறது. 2008-ம் ஆண் டிற்கான இடைக்கால அறிக்கையை இந்த அமைப்பு ஜனவ 2009-ல் வெளியிட்டுள் ளது. அதில் பல முக்கிய விவரங்கள் உள் ளன. அண்மைக்காலத்தில் இந்தியா முழுவதிலுமே தனியார் பள்ளியில் சேரும் மாண வர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளியில் சேர்ந்த 6-14 வயதிற்கு உள்பட்ட குழந்தைக ளின் எண்ணிக்கை 2005-ல் 16.4 சதவிகித மாக இருந்தது. 2008-ல் அது 22.5 சதவிகித மாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிக ளும் 2004 - 05-ம் ஆண்டில் 11.15 சதவிகித மாக இருந்தது 2006 - 07-ல் இது 18.86 சத விகிதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளும் அதில் பயிலும் மாணவர்களும் இவ்வாறு அதிகப்பதற்கு ஒரு முக்கிய காரணம் மக்கள் மதிப்பீட்டில் தனியார் பள்ளிகள் உயர்ந்த நிலையைப் பெற்றிருப்பதுதான். மக்களிடையே தற் போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு வெற்றிய டைந்ததன் காரணமாக பல இளம் தம்பதி யர் ""நாம் இருவர், நமக்கு இருவர்'' என்ப தையும் சிலர் ""நாமிருவர் நமக்கு ஒருவர்'' என்பதையும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர். தங்கள் குழந்தைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவ தால் குடும்ப வருமானமும் அதிகத்துள் ளது. எனவே, தங்களது குழந்தைகளின் கல் விக்காக அதிகப் பணம் செலவழிக்க அவர் கள் தயாராக உள்ளனர். அவர்களது எண் ணப்படி, அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் சிறந்தவை. அதைத் தவிர உலகம யமாதலின் தாக்கத்தால் தங்களது குழந்தை களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் அவசியம் என்று கருதுகிறார்கள். இக் காரணங்களி னால் தனியார் பள்ளிகளுக்கு சமுதாயத் தில் ஓரளவு வாய்ப்பும் வசதியும் உள்ளவர் களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள் ளது. இதன் தாக்கத்தை ஏழை எளிய குடும் பங்களிலும் காண முடிகிறது. உண்மையிலேயே அனைத்து தனியார் பள்ளிகளும் சிறந்தவை என்று சொல்ல முடியாது. மிகச்சிறந்த முறையிலே சில தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அவை மொத்தத்தில் 10 சதவிகி தமே இருக்கலாம். மேலும் ஒரு மாணவனின் கல்வித் தரத்தில் பள் ளியின் பங்கு ஓரளவுக்குத்தான் முக்கியமானது. மாணவனின் இயல்பான திறன், அவனுடைய குடும்பச் சூழ்நிலை, அவன் வசிக்கும் கிராமச் சூழ்நிலை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தையின் தாயார் கல்வி அறிவு பெற்றி ருந்தால் அந்தக் குழந்தை, கல்வி அறிவு இல்லாத ஒரு பெண்ணின் குழந்தையை விட கல்வித்திறன் மிக்கதாக இருக்கும். பிர தம் அமைப்பின் ஆய்வின்படி பக்கா வீடு, மின்சார வசதி, டெலிபோன் மற்றும் இதர தகவல் தொடர்பு வசதி ஆகியவை கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஒரு குழந்தையின் கல்வித் திறன் இதர குழந் தைகளின் திறனைவிட அதிகமாக இருக்கி றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிக்குக் குறைவில்லை. அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி, சாலை வசதி, தொலைத் தொடர்பு வசதி உள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்கம் 2007-ம் ஆண்டில் வெளி யிட்டுள்ள கையேட்டின்படி தமிழ்நாட்டி லுள்ள 34,342 துவக்கப்பள்ளிகளில் (1-5 வகுப்புகள்) 24,310 பள்ளிகள் அரசுப் பள் ளிகள். 5,037 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் 4,995. மொத்தமுள்ள 8,718 நடுநிலைப் பள்ளிகளில் 6,487 அரசுப் பள்ளிகள். 1,679 அரசு உதவி பெறும் தனி யார் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனி யார் பள்ளிகள் 552தான். மொத்தமாகப் பார்த்தால் துவக்கக் கல்வி நிலையில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் எண் ணிக்கை சுமார் 13 சதவிகிதம்தான். அவற் றில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை யும் ஏறத்தாழ இதே அளவில்தான் உள் ளது. 80 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், அரசு - தனியார் பள் ளிகளைப் பற்றிய பொதுமக்களின் கருத்து அகில இந்திய நிலையை ஒட்டியே உள் ளது. அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் சென்னை மாநகராட்சிப் பள் ளிகளைப் பற்றி வெளியிட்ட செய்தியில் ஒரு தாய் கூறிய கருத்து கீழ்க்கண்டவாறு உள்ளது. ""மாநகராட்சிப் பள்ளி ஆசியர்க ளில் சிலர் குழந்தைகளின் கட்டுப்பாடான ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதால்தான் நாங்கள் தனியார் பள்ளி களை நாட வேண்டியிருக்கிறது. அவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கும் வருவ தில்லை. தனியார் பள்ளிகளில் உள்ள பல உள்கட்டமைப்பு வசதிகள் மாநக ராட்சிப் பள்ளிகளில் இல்லை. சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் போது மானதாக இல்லை.'' அகில இந்திய அளவில் இருப் பது போலவே, தமிழ் நாட்டிலும் ஒரு சில தனியார் பள்ளிகள் தான் மிகச்சிறந்த முறையில் இயங்கி வரு கின்றன.பல பள்ளிகள், சில ஆண்டுக ளுக்கு முன் கொடிய தீ விபத்து நிகழ்ந்த, கும்பகோணம் பள்ளியைப்போல்தான் உள்ளன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் ""அனைத்து தனியார் பள்ளிகளும் உயர்ந் தவை. அனைத்து அரசு பள்ளிகளும் தரம் குறைந்தவை'' என்ற ஒரு கருத்து நிலவி வரு கிறது. இந்தக் கருத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வில்லை. அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசி யர்கள் முறையான கல்வித் தகுதி பெற்றவர் கள். அதைத் தவிர கற்பிக்கும் பயிற்சி பெற் றவர்கள். அதற்கும் மேலாக தனியார் பள்ளி ஆசியர்களைவிட அதிகம் ஊதி யம் பெறுபவர்கள். அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ஏதும் கிடையாது. இல வச மதிய உணவு, இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்படுகின்றன. இருந்தபோதிலும், ஏழை பெற்றோர்கள்கூட ஏன் இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தனியார் பள்ளி யில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள்? இதைத் தீவிரமாக ஆராய வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ளதுபோல் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லை என்று ஒரு தாய் கூறுவது வியப்பை அளிக்கிறது.ஏனென் றால் எந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்துக் கும் கிடைக்காத நிதி வசதி சென்னை மாந கராட்சிக்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சி தற்போது ஒவ் வோர் ஆண்டும் சுமார் 70 கோடி ரூபாய் துவக்கக் கல்வி வயாக, சொத்து வ செலுத்துபவடமிருந்து வசூலிக்கிறது. அவ்வாறு வசூலித்து முழுவதும் செலவ ழிக்கப்படாமல் 1-4-2009 அன்று கையிருப் பில் உள்ள தொகை சுமார் ரூ. 120 கோடி யாகும். சென்னை மாநகராட்சி சுமார் 300 பள்ளி களை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 250 பள்ளிகள் துவக்க நடுநிலைப் பள்ளி கள்தான். தற்போது மாநகராட்சி கையி ருப்பில் உள்ள தொகையைக் கொண்டு 300 பள்ளிகளிலும் தலா ரூ. 40 லட்சம் வீதம் உள்கட்டமைப்பு வசதிக்காக உடனடியா கச் செலவழிக்கலாம். அதைத் தவிர வசூ லிக்கும் துவக்கக் கல்வி வயைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு பள்ளிக் கும் ரூ. 20 லட்சம் செலவு செய்யலாம். இவ்வாறு செய்தால் எந்தத் தனியார் பள் ளியிலும் கிடைக்காத வசதிகளை மாநக ராட்சிப் பள்ளிகளில் செய்து கொடுக்க முடியும். மாநகராட்சி இதைச் செய்யவில்லை என் பதுதான் வருந்தத்தக்க விஷயம். அதை விட வருந்தத்தக்கது ""ஏன் அவ்வாறு செய் யவில்லை'' என்று மாநகராட்சியை மன்ற உறுப்பினர்களோ அல்லது வசெலுத்தும் குடிமக்களோ கேட்கவில்லை என்பதே. சென்னையில் மட்டுமல்ல இந்த நிலை. தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிக ளிலும் இதே நிலைதான். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் 1-4-2008 அன்று கையிருப்பில் இருந்த துவக்கக் கல்வி வ நிதி சுமார் ரூ. 53.57 கோடியா கும்.இந்த நிலை திடீரென்று ஏற்பட்ட தல்ல. மாநகராட்சி, கல்வித்துறை, ஆசி யர்கள், வ செலுத்தும் குடிமக்கள் ஆகி யோர் பல ஆண்டுகளாகக் காட்டிய அக்க றையின்மையினால் வந்த விளைவுதான் இது. திருநெல்வேலி மாநகராட்சியில், மாநக ராட்சியின் மையப் பகுதியில் - நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 250 மிட்டர் தொலைவில் - உள்ள மாநகராட்சி சிந்துபூந்துறை நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்புகளுக்கும் சேர்ந்து 6 மாணவர்களும் ஓர் ஆசியையும் இருக்கி றார்கள். ஏறத்தாழ ஓர் ஏக்கர் நிலப்பரப் பில் இந்தப் பள்ளி இருக்கிறது. ஒரு காலத் தில் 400 - 500 மாணவர்கள் படித்த பள்ளி தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இதை விட வருந்தக்கூடிய விஷயம் இந்தப் பள் ளிக்கு எதிலேயே அண்மையில் தொடங் கப்பட்ட தனியார் பள்ளியில் பல மாண வர்கள் படிக்கிறார்கள். இந்த மாநகராட் சிப் பள்ளியை இடித்து அங்கு ஒரு திரு மண மண்டபம் கட்டுவதற்கான ஆலோச னையும் பசீலிக்கப்பட்டது. சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் இருந்த ஒரு மாநகராட் சிப் பள்ளியை இடித்துவிட்டுத்தான் அங்கு பிட்டி தியாகராயர் கலையரங்கம் கட்டப் பட்டுள்ளது. மேற்சொன்ன அவலநிலை தமிழ்நாட் டில் சுமார் 20 - 25 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளியைப் பொறுத்தமட்டில் கிராம ஊராட்சிக்கு அதற்கான பொறுப்பும், உமையும் அளிக் கப்பட வேண்டும். ஆசியர்களும் தங்க ளது தகுதி, பயிற்சி, ஊதியம் ஆகியவற் றுக்கு ஏற்ப அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கல்வித்துறை அரசுப் பள்ளியை புகழ் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு இணை யான தரத்துக்குக் கொண்டு வருவதைப் பற்றி சிந்தித்து சீய முயற்சிகளை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அந்தந் தப் பகுதியிலுள்ள படித்தவர்கள் தத்தம் பகுதியில் உள்ள அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்குவது பற்றி ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Monday, July 13, 2009

குரு - சிஷ்யன்''

சத்யராஜ்- சுந்தர்.சி இணைந்து நடிக்கும் ஷக்தி சதம்பரம் இயக்கும் படத்திற்கு 'குரு சிஷ்யன்' என பெயர் சூட்டி பூஜை போட்டுள்ளனர் இதில் விசேஷம் ஏ.வி.எம்மில் நடந்த படத்தொடக்க விழாவில் திரையுலகில் குரு - சிஷ்யர்களான இராம.நாராயணன் - பேரரசு, கே.பாக்யராஜ் - பார்த்திபன், மணிவண்ணன் - சீமான், கே.எஸ்.ரவிக்குமார் - சேரன், எடிட்டர் மோகன் - ஜெயம் ராஜா உள்ளிட்டோரை பங்கேற்க வைத்து அவர்களது குரு - சிஷ்ய அனுபவங்களை பேச வைத்து வாழ்த்து பெற்றதுதான் ஹைலைட்!

இதில் குருநாதர் இராம.நாராயணன் தனது சிஷ்யர் பேரரசுவை என்னைப் போலவே 'சிறுக கட்டி பெருக வாழ்' என்பார்கள் அதற்கேற்ப பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளருக்கும் செம துட்டு சம்பாதித்து கொடுக்கும் இயக்குநர் என்று வாழ்த்தினார். சிஷ்யர்களில் சேரன் தன் குருநாதர் ரவிக்குமாரின் பெருமைகளை பற்றி கூறும்போது, எல்லோரிடமும் சகஜமாக பழகும் ரவிக்குமார் சார், அஸிஸ்டண்டுகளிடம் மட்டும் சிரித்து பேச மாட்டார். அதுதான் நானெல்லாம் வெற்றி பெற காரணம் என்றார். எல்லாம் கற்று தராதது வருத்தம் என்றும் சேரன் கூற, பார்த்திபனோ குரு - சிஷ்யன் உறவுக்கு ஈடு தொப்புள் கொடி உறவு கூட கிடையாது என்றார். அவரது குருநாதர் கே.பாக்யராஜோ, பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகிய மூவரும் 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பில் ஒவ்வொருவராக சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றதையும், அதற்காக அந்த படத்தில் வைத்த குரு துரோகி டயலாக்கையும் சொல்லி அதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்றார்.

Friday, July 10, 2009

நைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்காது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க்களுக்கு செல்லும் வாகனங்களில் இலவசமாக நைட்ரஜன் வாயுவை நிரப்பலாம். இதன் மூலம் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும்.ரேஸ் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், விமானங் கள், விண்வெளி ஓடங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்களுக்கு, நைட்ரஜன் வாயு பயன் படுத்தப்படுகிறது. இவை இந்தியா உள் ளிட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாக பின்பற்றப் பட்டது.


இந்தியாவில் பொதுமக் கள் பயன்படுத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்த, மத் திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியை, பெட்ரோல் பங்க்குகளில் ஏற்படுத்த முடிவு செய்தது.கோவை, அவினாசி ரோட்டிலுள்ள ரவிச்சந் திரா, ஜெயம் அண்ட் கோ, ராம் அண்ட் கோ, சிங்காநல்லூரிலுள்ள சாந்தி கியர்ஸ், வடகோவை, உக் கடம், மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட் ரோல் பங்க்களில் நைட்ரஜன் வாயு இலவசமாக, வாகனங்களில் நிரப்பி கொடுக்கப்படுகிறது.

நைட்ரஜன் வாயுவை வாகன சக்கரங்களில் நிரப் பும் போது, அதிக மைலேஜ் கிடைக்கிறது. டயர், டியூப் ஆயுள் நீட்டிப்பதுடன், டியூப் வெடிப்பு தடுக்கப்படுகிறது.நைட்ரஜன் வாயுவில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதால், சக்கரத்தினுள் துருப் பிடிப்பது தடுக்கப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது பிடிப்புத் தன்மை (ரோடு கிரிப்) கிடைக்கிறது. பயணிப்பதற்கு சொகுசாக இருக்கும். அடிக்கடி காற்றின் அளவை சரி பார்க்க வேண் டிய அவசியம் இல்லை.'இலவசமாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வசதியை, வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

சர்க்கஸ் கூடாரத்தில் சக்ஸஸ் காதல்

சர்க்கஸ் கூடாரத்தில் நிகழ்ந்த சக்ஸஸ் காதல் கதை இது. கோவை நகரம் சமீபத்தில் இப்படியொரு திருமணத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்து வரும் ஜம்போ சர்க்கஸ் கூடாரம்தான், இந்த காதல் ஜோடிகளின் வசிப்பிடம், புகலிடம், புகுந்த இடம் எல்லாமே.

நேபாளத்தைச் சேர்ந்தவர் சூரஜ்(26); அற் புதமான "பார்' விளையாட்டு வீரர். தொங்குகிற கம்பியிலிருந்து கைகளை விட்டு, அங்கேயும் இங்கேயுமாக இவர் பறப்பதைப் பார்த் தால், கூடாரமே அதிரும்.இதே சர்க்கஸ்சில் யானையின் மீதும், சைக்கிளின் மீதும் விதவிதமாய் வித்தை செய்து பொடுசுகள் முதல் பெருசுகள் வரை ஈர்க்கிற நேபாள அழகி சுனிதா(22). இருவரும் ஒரே மாநிலம் என்பதோடு, இதே கூடாரத்தில் சிறு வயதிலிருந்தே சிநேகிதம்.

இருவருக்கும் காதல் பற்றியதும், சர்க்கஸ் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்ல, பெற்றோரை அழைத் துப் பேச, திருமணம் கைகூடியது.அப்போதுதான் தெரியவந்தது, இதே கூடாரத்தில் இன்னொரு காதல் ஜோடி இருக்கிறதென்று. கேரளாவைச் சேர்ந்த 24 வயது சைஜூவும், நேபாளத் தைச் சேர்ந்த 21 வயது மீனாவும், அந்த மற்றொரு ஜோடி. சைஜூவும் அட்டகாசமான "பார்' விளையாட்டு வீரர்; ஜிம்னாஸ்டிக்கில் அசத்துபவர்.

அந்தரத்திலே (ஸ்கை வாக்) நடந்து எல்லாரையும் விழி விரிய வைப்பவர் மீனா. இவர் களின் காதலுக்கும் இரு வீட் டாரின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினார் ஜம்போ சர்க்கஸ் தலைவர் அஜய். கோவையிலேயே இந்த திருமணத்தை நடத்த முடிவு செய் யப்பட்டது.நான்கு பேருடைய பெற் றோரும் வரவழைக்கப்பட்டனர்.

சர்க்கஸ் கூடாரமே திருமண வீடாக கோலாகலம் பூண் டது. கோவை கிரே டவுனில் உள்ள மாங்காடு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, சட்டைகளில் மாப்பிள்ளைகள் கலக்கினர்.மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ், பவிழம் ஜூவல்லர்ஸ் லிஜோ சுங்கத், சர்க்கஸ் ஊழியர்கள், சிறுவர், சிறுமியர் உட்பட எல் லாரும் மணமக்களை வாழ்த்தினர்.

கோவிலில் இருந்து சர்க் கஸ் கூடாரத்துக்கு வந்த அவர் களை சர்க்கஸ் யானை ஆசி வழங்கி வரவேற்றது.திருமணத்துக்கு வந்தவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் காஸ்மோஸ் சார்பில் இனிப்புகள் மற்றும் குளிர் பானம் வழங்கப்பட்டது.

அரசியல் பிரவேசமா?; -அஜீத்


அஜீத் படங்கள் ரிலீசாகும்போது போஸ்டர், கொடி தோரணங்கள் கட்-அவுட்கள் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ரசிகர் மன்றத்தினரின் பணியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இவற்றின் செயல்பாடுகளில் மாற்றத்தை தந்து வருகிறார் அஜீத்.

தனது பிறந்த நாளின்போது மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தி அப்பணிகளை தொடர்ந்து செய்ய வைத்து வருகிறார்.ரத்த தானம், ஏழைகளுக்கு உதவி வழங்குதல் போன்ற காரியங்களிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னொருபுறம் ரசிகர் மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
அஜீத்தின் அரசியல் பிரவேசத்துக்கு இவை முன்னோடியான வேலைகள் என்று செய்தி பரவியுள்ளது. விஜய் விரைவில் அரசியலுக்குவர இருப்பதால் அஜித்தும் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர்.
இதுபற்றி அஜீத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனது ரசிகர் மன்றங்களை சீர்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறேன். ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு அவசியம் அதற்காகத்தான் இந்த காரியத்தை செய்கிறேன்.
ரசிகர்மன்றத்தை சீரமைப்பதால் நானும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று வதந்தி கிளம்பியுள்ளது.
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. கால மாற்றத்தில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நடவடிக்கைகளும் மாறுபடும்.
என்னைப் பற்றி யாராவது தவறான கருத்துகள் வெளியிட்டால் அதற்கு விளக்கம் கொடுப்பது இல்லை. இபபோது மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன்.
இவ்வாறு அஜீத் கூறினார்.

Thursday, July 9, 2009

வரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன ? முடியல

ஒவ் வொரு பிரஜையும், அன்றாடம் தான் வாங்குகிற பொருட்களுக்கு, எத்தனை விதமான வரிகள் கட்டுகின்றனர் எனப் பார்த் தால், தலை சுற்றி விடும். முதலில் வருமான வரி; அடுத்து விற்பனை வரி. இதற்கு சர்சார்ஜ், சுங்கவரி, வீட்டு வரி, வாகனங்களுக்கு வரி, தொழில் வரி, தண்ணீர் வரி, சாக்கடை வரி. இதுபோக, தெரிந்தும், தெரியாமலும், அனேக வரிகள். இவை அனைத்தையும் போட்டு முடித்த பின், என்ன வரி போடலாம் என, ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து, சேவை வரியை கண்டுபிடித்து, அந்த வசூல் நன்றாக நடக்கிறது.

இதற்கு மேல் மூளையை கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்து, இப்போது புதிதாக வந்திருக்கிறது, "சாலை பாதுகாப்பு வரி!' சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போருக்கு உதவும் வகையில், இந்த வரி கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. காயமடைவோர், உயி ரிழப்புகளுக்காகத் தான் ஏற்கனவே, அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சட்டை, டவுசரை பிடுங்குகிற அளவுக்கு பிரிமியம் வசூல் பண்ணி, அதன் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய வாகனங்கள் வாங்கும் போது, வாகன வரி, சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், விபத்து, மரணத்திற்கு தாராள இழப் பீடு வழங்கலாமே! இந்த சாலை பாதுகாப்பு வரி தேவையற்றது.

டாஸ்மாக் கடைகள் மூலம், பணம் கொட்டுகிறது. இதுதவிர, சாதாரண ஏழை கூட, வீடு ரிப்பேருக்கு, ஒரு மூட்டை சிமென்ட் 275 ரூபாய்க்கு வாங்கினால், இதில் அரசுக்கு, விற்பனை வரி, செஸ் வரி, சுங்க வரி, இதர வரிகள் எல்லாம், 80 ரூபாய்க்கு மேல் போய் சேருகிறது.

ஒரு மூட்டை சிமென்ட்டிலேயே இப்படி என்றால், குண்டூசி முதல் கோடி ரூபாய் மிஷின் வரை எத்தனை கோடி வசூலாகும். இந்தப் பணத்தில், அரசு ஊழியர்களை, "மனம் குளிர' வைத்துக் கொள்ள, சம்பளத்தை அள்ளிக் கொடுத் தும், இலவச "டிவி'யிலிருந்து என்னென்ன வோ கொடுத்து, அவ் வளவு செலவையும் சரிக் கட்ட இப்படியெல்லாம் வித, விதமாக வரியை கண்டுபிடித்து போடுகின்றனர்.

பெரும்பாலான இலவசங்கள், வாங்குகிறவர்கள் பாக் கெட்டிலிருந்தே எடுத்து கொடுக்கப் படுகின்றன. மேலும் கொஞ்சம் பள, பள வென ஒரு புதிய ரோடு அல் லது ரிங்ரோடு போட்டால், உடனே அங்கு டோல் கேட் வரி வசூலிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் வசூலித்தது பத்தாது என, சாலை பாதுகாப்பு வரி என்பது நியாயமற்றது. அரசு இதை, கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சுமை யை, மக்கள் மீது சுமத்தாமல் நீக்க வேண்டும்.

விரக்தியில் விஷால்

ஆரம்பத்தில் வெற்றி படங்களையே கொடுத்து வந்த விஷால், "சத்தியம், தோரணை' படங்களால், மிகுந்த சரிவில் விழுந்துள்ளார். சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வேதனையில் இருப்பதுடன், அடுத்து என்ன செய்யலாம் என்பதை தன் அண்ணன், அப்பாவுடன் விவாதித்து வருகிறார் விஷால். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கலாம் என்றால், இவரது வாய்த்துடுக்கால், பல டைரக்டர்கள் பயந்து போயிருக்கின்றனர். என்ன செய்வாரோ விஷால், மர்மமாக உள்ளது.

Wednesday, July 8, 2009

நடிகர் விஜய் ஆரம்பிக்க போகும் டிவி விரைவில்

அரசியலுக்கு வரவிருப்பதால் விஜய் சொந்தமாக டிவி தொடங்க விண்ணப்பம் செய்துள்ளார். சுமார் பதினைந்து கோடி தேவைப்படுவதால் ரசிகர்கள் தலா ஆயிரம் வீதம் ஒன்னரை லட்சம் பேர் தருமாறு அன்பு கட்டளை போட்டுள்ளார் . அப்போதுதான் கேபிள் ஆப்பரேட்டேர் சேனல் கொடுக்காவிட்டாலும் , தெளிவாக இல்லாவிட்டலும் அவர்கள் கேட்பார்கள் என்பதால் எந்த முடிவு செய்துள்ளார்.

அப்பா சேனல் பெயர் என்ன விஜய் டிவி ன்னு வைக்க முடியாதே .

Tuesday, July 7, 2009

சினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிராமத்தில் வளர்ச்சிப் பணி

சண்டிகார்: அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர், கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாக அந்நாட்டு கோர்ட்டில் தெரிவித்தனர்.



பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள குரேக், சீம்னா ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஹர்ஜித் சிங் மன் மற்றும் சுக்ராஜ் சிங் தாலிவால். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், 1990ம் ஆண்டு அமெரிக்கா சென்றனர். அங்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குர்மித் சிங் பிஸ்லா என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.


இதை தொடர்ந்து, ஹர்ஜித் சிங் மன், சுக்ராஜ் சிங் தாலிவால் மற்றும் குர்மித் சிங் பிஸ்லா ஆகிய மூவரும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா இடையே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். சமீபத்தில், இவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


அங்கு இவர்கள் மூவரும், கடந்த ஐந்தாண்டுகளில், அமெரிக்காவின் பேக்கர்ஸ்பீல்டு பகுதியில் இருந்து கனடாவிற்கு 36 ஆயிரம் கிலோ கிராம் கோகைய்ன் என்னும் போதைப் பொருள் கடத்தியதாக ஒப்புக் கொண்டனர். மேலும், குர்மித் பிஸ்லா கூறியதாவது: பஞ்சாபில் உள்ள சீம்னா மற்றும் குரேக் ஆகிய கிராமங்களை சேர்ந்த மன் மற்றும் தாலிவால் இருவரும், போதைப் பொருள் கடத்தல் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினர். ஹர்ஜித் சிங் மன், தனது கிராம குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு அரங்கமும், மக்களுக்காக புதிய சமுதாயக் கூடம் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள் ளார் என்றார்.

Monday, July 6, 2009

அஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்

வாலி , அமர்க்களம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , தீனா என்று உச்சத்தை நோக்கி பறந்த அஜீத் எல்லார் மனதிலும் இடம் பிடித்தார் மேலும் பூவெல்லாம் உன் வாசம் எலோருக்கும் பிடித்த குடும்ப படம் .

ஹிந்தியில் ஷாருக்குடன் அசோகா என விறு விறு வென வளர்ந்தார் .

மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்க தொடங்கினர் .

அவர் நடித்த ரெட் அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்தது இந்த படத்தை பற்றி சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் தெரியும் . அஜித்துக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது ,தொடர்ந்து வந்த ராஜா சுமார்.

இன்று கூட பலரும் வாலி வரை அஜித்தான் பிடிக்கும் ரெட் வந்த பிறகு பிடிக்காது என்று சொல்வார்கள் .இத்தனை அடுத்து வந்த வில்லன் கொஞ்சம் பழைய பெயரை கொடுத்தது.

பிறகு தான் அவர் நடித்த ஆஞ்சனேயா மீண்டும் ரசிகர்களை சோதித்து பார்த்தது அடுத்து வந்த ஜனா ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பை பெற்றது ரெட்-யை விட பலத்த சறுக்கல் அஜித்துக்கு . இன்று வரை யாரும் பொறுமையாக முழுதும் பார்க்கமுடியாத படம் . இடையிடையே சுமாரான படங்களை கொடுத்தார் .



அடுத்து வந்த அட்டகாசம் மீதம் இருந்த ரசிகர்களுக்கு தீனி போட்டது , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அடுத்து வந்த ஜீ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .
அதற்கப்புறம் வந்த திருப்பதி திருப்தி கொடுத்தது ,

அடுத்து வந்த வரலாறு அஜித் முன்னேற வழிவகுத்தது , தீபாவளிக்கு வந்த ஆழ்வார் படம் போக்கிரி . தமிரபாரணி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கமுடிய வில்லை .

அடுத்து வந்த பில்லா மெகா ஹிட் இழந்த ரசிகர்களை மீது அஜித்துக்கு கொடுத்தது , தமிழில் இதுவரை வந்த ஸ்டைல்இஸ் படம் இது மட்டும்தான் . ஏகன் சுமாராக போனது .


அஜித் மட்டும் ரெட் , ஜனா ஆகிய படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் ரஜினிக்கு அருகே சென்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Sunday, July 5, 2009

விஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி, ரசிகர் மன்றத்தினருடன் கலந்து ஆலோசித்துள்ளார். அவர்களும், "நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்; நாங்கள் எல் லாரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்' என்று சொன்னதை நம்பி, அரசியலில் குதிக்கப் போகிறார்.


"நான் நிறைய பத்திரிகைகள் படிக்கிறேன். அதனால் அரசியல் நடப்பு எனக்கு தெரியும். ஒரு சாமான்யனுக்கு எந்தளவு அரசியல் தெரியுமோ, அந்தளவுக்கு எனக்குத் தெரியும்' என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறியது, இன்னும், தான் அரசியலில் போதிய அனுபவம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது.


ஒரு கட்சி ஆரம்பித்து, அதன் தலைவராக ஆக நினைக்கும் அவருக்கு, 49 படத்தில் நடித்த அனுபவம் மட்டும் போதாது. ஜனநாயக நாட்டில் ஒருவர், எந்த கட்சியையும் ஆரம்பிக்கலாம், ஆதரிக்கலாம், நடத்தலாம்; ஆனால், மக்கள் மனதில் இடம் பெறுபவரே, ஆட்சியைப் பிடிப்பவர். அந்த வகையில், எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், தற்போதைய ரசிகர்களை நம்பி, ஆந்திராவில் கட்சியை ஆரம்பித்து, தவித்து வரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, அங்கே சூப்பர் ஸ்டார் தான்; ஆனால், அவரை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே!

"ஒருவன் எதைப் பெற முழுத் தகுதியுடையவனாக இருக்கிறானோ, அவன் அதை ஒரு நாள் பெற, இப்பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது' என்ற விவேகானந்தரின் கூற்றுப்படி, விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால், அனுபவம் பெற்று, மக்களுக்கு சேவை செய்தால், அவர்களாகவே உங்களை அரசியலில் ஆதரிப்பர். அதை விட்டு, ரசிகர் கூட்டத்தை நம்பி இறங்கினால், மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கிய கதையாகி விடும்.

வீரப்பன் வாங்கிய சத்தியம்!

கோவை கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் எழுதிய, "இதயம் ஒரு கோவில்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய, "நக்கீரன்' இதழ் ஆசிரியர் கோபால், தனது வழக்கமான பாணியில் வீரப்பன் கதையை எடுத்துவிட்டார்.


அவர் பேசுகையில், "கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்கு சென்றிருந்த போது, நான், வீரப்பன், ராஜ்குமார் மூவரும் வரிசையாக படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் என்னிடம், "உன் மகளை என்ன படிக்க வைக்கப் போகிறாய்?' எனக் கேட்டான்.


நான், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்கப் போகிறேன்' என்றேன். அதற்கு வீரப்பன், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்காதே; அவ்வளவு படிச்சுட்டு, ஒண்ணுமே படிக்காத அரசியல்வாதிகள் பின்னால கை கட்டி நிற்க வேண்டியிருக்கும்.

அது வேண்டாம்; உன் மகளை டாக்டருக்கு படிக்க வை' என்றான். அதோடு விடாமல், என்னிடம், "மகளை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் என சத்தியம் வேற வாங்கிக்கொண்டான்' எனச் சொல்லி முடித்தார்.எப்படி, "ரியாக்ட்' பண்ணுவது எனத் தெரியாமல் விழித்தார், நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ்.

Saturday, July 4, 2009

தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி

ராமகிருஷ்ண பரமஹம்சர் மகத்தான ஞானியே தவிர படிப்பறிவில் சிறந்தவர் அல்ல . அவரிடம் கேசவந்திரசென் என்ற அறிஞர் வந்து இறைவன் இல்லை என்று வாதிட்டார் ,


இடையிடையே பரமஹம்சர் சிரிப்பார் , பரவசமடைவார் சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . பரமஹம்சர் இறைவன் இல்லை என்பதை ஒப்பு கொண்டுவிட்டார் என அனைவரும் நினைத்தனர் , கேசவந்திரசென் கூட தான் வேட்ட்ரிபெட்ட்று விட்டதாக நினைத்தார் .

பேசி ஓய்ந்த கேசவந்திரசென் கலைப்படைந்தபோது பரமஹம்சர் சொன்னார் . உங்கள் வாதங்கள் அருமை , அற்ப்புதம் ஆனால் நான் என்ன செய்வேன் கடவுள் இருப்பது எனக்கு நன்றாக தெரியுமே என்றார் . இதுதான் தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி இதுதானே ..

தெலுங்கிலும் கலக்கும் அயன் சூர்யா


தமிழில் இந்தவருட மெகா கமர்சியல் ஹிட் சூர்யா நடித்த அயன்.தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ .வி . எம் அயனை தெலுங்கில் "வீடோக்காடே "(Veedokkade ) என்ற பெயரில் டப் செய்து (200) திரையரங்குகளில் வெளியிட்டது

ரசிகர்கள் தமிழ் படங்களை விடஅதிகமாக கமர்சியல் படத்தை விரும்புவார்கள் .

அயன் அங்கு சக்கை போடுபோட்டுவருகிறது .

தமிழைப்போலதெலுங்கிலும் அயன் வசூல் சாதனையை முறியடிக்கும் என்பதுதெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

சன் குழுமதெலுங்கு சேனல்கள் சன் டிவி போல விளம்பரங்கள் தந்துவருகின்றன. தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு இது பெரியஅதிர்ச்சி யாக உள்ளது .

கலக்குங்க சூர்யா ..



Friday, July 3, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க

தினமும் எழுதிக்கொண்டிருந்த எனக்கு
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் அன்பிற்க்குஉரியவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க

பிறந்தநாள் கொண்டாடுபவரின் பெயர், ஊர் , விருப்பமிருந்தால் வயதையும் , அவரின் புகைப்படத்தையும் , தெரிவிக்கும் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைத்து (ganesanjaikumarsrm@gmail.com) அல்லது (vinjaikumar@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன் .


இன்றும் நாளையும் புகைப்படம் இல்லாதவர்கள் கமெண்ட் ல் சொல்லுங்கள்.

உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன்
.

உங்கள் அன்பானவரின் பிறந்தநாளை இந்த ஐடியா மணி உடன் கொண்டாடுங்கள் .

இடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு .

உங்கள் ஐடியா மணி

பிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை

இன்னிக்கு என்ர மச்சா தஞ்சாவூர் ஸ்கூல் வாத்தியார் நா நேத்தைக்கி நம்பட ஊட்டுக்கு வந்தாருகன்னா அப்ப நம்ம்பட ப்லாக் பாத்துட்டு அங்க நடந்த இந்த மேட்டர் சொன்னாருகன்னா நல்ல காதல் கதைநா

தஞ்சாவூர் பக்கத்துல பாபநாசம் என்கிற ஊர் ல வேல்முருகன்னு கேட்டரிங் அதனா சமையல் கலை முடிசிட்டு கொஞ்சநாள் அப்புறம்
அவரோட மாமா செல் போன் கடைக்கி வேலைக்கி போய்ட்டாரு அப்ப அங்க வந்த பக்கத்து வீட்டு பொண்ணு உஷா , இவரு லவ் பண்ண ஆரம்பிச்சாங்க.


இரண்டு வருடம் இப்புடியே போயிடுச்சி அப்பறம் வழக்கம் போல அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி சொந்தக்கார பையனுக்கு நிச்சயம் பண்ணிடாங்க . இருவரும் மேஜர் ஒடனே ரெண்டு பேரு கோயில்ல வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டாங்க .

ஒரு வாடகை வீட்டுல அந்த செல் போன் கடைல வேலை பார்க்க இப்படியே பதினைந்து நாள் போய்டுச்சி பொண்ண கடத்திட்டு போயட்டருன்னு காவல் நிலையத்துல கேஸ் குடுத்துட்டாங்க .

விசாரணைக்கு வேல்முருகன்-உஷா அங்க போனாங்க அங்கிருக்கும் ஆய்வாளர் இவங்களை மிரட்டி அதனால அந்த பொண்ணு தாலிய கழட்டி வேல் முருகன் கைல குடுத்துட்டு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு எழுதி வாங்கிகிட்டு அவங்க அப்பகூட உஷாவை அனுப்பிட்டாங்க .

ஆனா வேல்முருகன் பொறுத்துக்க முடியாம தாலிய வாயில் போட்டு விழுங்கி விட்டார் . வழியாலும் இப்போது அவதிப்படுகிறார் .

உஷா கழுத்தில் ஏறும் வரை இங்கு தான் இருக்கும் . மருத்துவர்கள் தாலி பெருங்குடலில் சிக்கி ஆபத்தான நிலையை உருவாக்கும் என எச்சரித்தும் அவர் மறுத்துவிட்டார் .


அந்த ஆய்வாளர் இப்போது மாறுதலில் சென்னை சென்றுவிட்டார் . மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளார் . பார்ர்ப்போம் என்ன நடக்கும் என்று .. .
எத்தனை வீடுகளில் உண்மை காதலை ஏற்றுக்கொள்கின்றனர் . காதல்ன்னு படம் வந்தப்ப அந்த படத்துல இறுதி காட்சில பாத்துட்டு ஏன் இப்படி பண்றாங்க அவங்கள சேர்த்து வைகலையே ன்னு எத்தனை பேர் அழுதவங்க தெரியுமா,.. சினிமாவில் மட்டும் தான் காதலுக்கு மரியாதை. மக்களும் கைதட்டுகின்றனர் , நடைமுறையில் ஜாதி ,மதம் , பணம் தான் முடிவுசெய்கிறது.. முக்கிய காரணம் இந்த சமூகம்தான் நா ...

Thursday, July 2, 2009

அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம்




இன்னிக்கு நம்ம ஊர்ல
காந்திபுரம் , ஹோப் காலேஜ் எல்லா சுத்தி என்னஎழுதலானு பார்த்தா எதுவுமே தோணல வீட்டுக்கு போனா டிவி மின்சார கனவு சினிமா ஓடிட்டு இருக்கு அதுல அரவிந்தசாமி கஜோல் அக்கா கூட தங்கத்தாமரை மகளே வா அருகேன்னு கூப்டாரு அப்ப மின்சாரம் கட் அப்பவந்துதா இந்த

அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம் ஜோக் :

அரவிந்தசாமி வந்தது மின்சார கனவு , ஆற்காடு வீராசாமி வந்ததால் மின்சாரமே கனவு. இன்னு சொல்லிடே போகலாம்

தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஜோக் இல்ல . அவர்களுக்கு இது உண்மையானநிகழ்வு. அவர்களது வேதனை
வரேநுங்நா.

Wednesday, July 1, 2009

எங்கே பிரபாகரன்? அவருக்கு பிடித்த திரைப்படம் எது?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்னும் கேள்வியை யாரிடம்கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள்வேறுபடும். பிரபாகரன் என்னும் பெயர் உலக அளவில் பரவியுள்ள தமிழ்மக்களிடமும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் ஏன் சர்வதேசத்திலும்உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் அவரவர் கொண்ட அரசியலின் பாற்பட்டது. அந்த அரசியல் பார்வைதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்னும் பதிலையும்இல்லை என்னும் பதிலையும் இப்போதைக்கு தந்து கொண்டிருக்கிறது. ஆம் எனச்சொல்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுவதுபோல இல்லை என்று சொல்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் குறித்துக்கேள்விகள் எழுப்பப்படுவது போல இல்லை என்று சொல்பவர்கள் முன்வைக்கும்தரவுகள், விளக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரபாகரன்இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சொல்பவர்கள் ஆதாரப் பூர்வமாகநிரூபிக்க முடியாததைப் போல, அவர் உயிருடன் இல்லை என்று சொல்பவர்கள்முன்வைக்கும் ஆதாரங்களும் விஞ்ஞானப் பூர்வமாக இல்லை. இரண்டுதரப்பிலுமே அனுமானங்களும், ஊகங்களும் மனவிருப்பும் இந்தக் கட்டத்தில்தாராளமாகத் தொழிற்படுகின்றன.


பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களிலொன்று
"" The Battle Of Algiers. 1954 க்கும் 1962க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரெஞ்சுஏகாதிபத்தியத்திற்கெதிராக அல்ஜீரியர்கள் நடாத்திய போராட்டங்களின்உண்மைச் சம்பவங்களின் சாயலைக்கொண்டு உருவாக்கபட்ட படம் அது. வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களிலொன்று. கில்லோபொன்ராகோவோ எனும் இத்தாலிய நெறியாளருடையது. அத்திரைப் படத்தில்அலி லா பொன்ரே என்கிற கொரில்லாப் போராளித் தலைவன் இறுதியில்கொல்லப்படுகிறான். அதற்குப் பிறகு வெடித்தெழும் வெகுஜனப் போராட்டங்கள்ஏறத்தாழ மூன்றாண்டுகளின் பின்னர் அல்ஜீரியாவுக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்கின்றன. விடுதலைப்புலிகளது பெருமளவு தலைமைகள்கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்க்கவேண்டிய புள்ளிகளிளொன்று இது.

கரகாட்டக்காரன் ரீமேக் - விஜயகாந்த் , நயன்தாரா நடிப்பில் கற்பனை கலாட்டா






நம்ம ராமராஜன் நடித்து சக்க போடு போட்ட படம் கரகாட்ட காரன் இப்ப அந்த படத்தை ரீமேக் பண்ணா அதுல நம்ம விஜயகாந்த் ஹீரோ நயன்தாரா ஹீரோயின் இப்ப அவங்களுக்குத்தா கஷ்டகாலம் விஜயகாந்த் தேர்தல் தூள்விகளாலும் , நயன்தாரா படங்கள் ஏதும் இல்லாததாலும் அவர்கள் இன்னும் ஒரு ரவுண்டு வர இது உதவியாக இருக்கும் . ஏற்கனவே விஜயகாந்த் கூட நடிக்க முடியாதுன்னு மறுத்த நயன்தாரா கூட நடிகிரதால விஜயகாந்துக்கு சந்தோசம் .

டைரக்டர் யாருன்னு தெரியுமா நம்ம பேரரசு கவுண்டமனியாக விஜயகாந்தே பண்றாரு ஏன் தெர்யுமா செந்திலாக நம்ம வடிவேல் நடிக்கிறாரு . இப்ப காரணம் தெரிஞ்சிதா . அடுத்து விஜயகாந்த் அம்மா வேடத்துக்கு அந்த படத்துல காந்திமதி கலக்கிருப்பாங்க அதுக்கு நம்ம ஓட்ட வாய் சுகாசினி தா சரியாக இருக்கு . ரெண்டு பெரு பேசுனா ஒரே மாதிரி இருக்கும் , அவங்க தம்பியா நம்ம சக்தி சிதம்பரத்த போட்டுடலா .

ஒரே கமெடி தா போங்கனா .

இப்ப படம் ஸ்டார்ட் விஜயகாந்த நயன்தாரா கரகாட்ட போட்டிக்கு கூப்புடுறாங்க
விஜயகாந்த் : இந்தா பாரு புள்ள நா உன்கூட லா ஆடமாட்டே மக்கள் கூட மட்டும் தா ஆடுவே . அதுவு போலீஸ் டிரஸ் குடுதீங்கன்ன இன்னு நல்லா ஆடுவே.
.

அடுத்து விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஓடிட்டு இருக்கு
நம்ம வடிவேல் ( கவுண்டமனி) விஜயகாந்த்துகிட்ட காதுல சொல்ல அவரு அப்புடியே ஜம்ப்பண்ணி உதைக்கிறாரு

விஜயகாந்த் : அது ஏன்டா என்ன பார்த்து கேட்ட .. மறுபடி உதைக்க இன்னொரு விஜயகாந்த் என்னடா அவன அடிசிகிட்டே இருக்க அப்படி என்னதா கேட்டா . ( கவுண்டமனி)விஜயகாந்த் மறுபடி உதைக்க அங்க வராங்க சுகாசினி பட்ஜெட் கம்மி அதனால நோ கோவை சரளா ..

சுகாசினி: என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட .
( கவுண்டமனி)விஜயகாந்த்: அவன் என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டா தெர்யுமா முதல்ல சிம்பு, இப்ப பிரபு தேவா , அப்ப உங்களில் யார் அடுத்த பிரபு தேவா னு கேக்குறா இந்தா பய . டேய் இந்த இந்திய நாட்டுல இருக்குற மக்கள்ள (எல்லோரு எஸ்கேப்)


அடுத்து நம்ம டைரக்டர் எங்க னு நீங்க கேக்குறது தெரியிது அவரு இல்லாமலா அவரு அப்பறம் நம்ம சுகாசினி சக்தி சிதம்பரம் சண்டைய அடுத்த பார்ட் ல பார்ர்ப்போம்
கமெண்ட் பண்ணுக . எனக்கு இப்ப சிறுவாணி ஆத்துல குளிக்கபோக டைம் னா
அப்புடியே ஹோப் காலேஜ் , காந்திபுரம்லா போய் அடுத்த பதிவு ஆரம்பிக்கணும் ..

வரேண்னா ........

Tuesday, June 30, 2009

விஜய் சூர்யா முந்துவது யார் ? ஐடியா மணி



"வேட்டைக்கரனா ,ஆதவனா தீபாவளி போட்டி"



அடுத்தடுத்து தொடர் வெற்றிகளால் சூர்யா நடிப்பில் ஆதவன் , அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் விஜய் வெற்றியை நோக்கி வேட்டைக்காரனாக வருகிறார் தன்னை நிரூபிக்க . இரண்டு பட விளம்பரங்களும் மிரட்டலாக உள்ளன உங்களுக்காக அவை இங்கே இணைத்துள்ளேன் .அவற்றை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.



இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மகத்தான விருந்துதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.
சூர்யா உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ் . ரவிக்குமார் டிரக்சனில் நயன்தாரா உடன் வருகிறார் . கே.எஸ் .ரவிக்குமார் படங்கள் அனைத்தும் நிறைவான வெற்றியை பெரும் என்பது எல்லோருக்கும் தெரியும் . இது கண்டிப்பாக வித்தியாசமான கதை சூர்யா வில்லன் போல ஹீரோ .சூர்யா இப்ப தமிழ் நாட்டின் சின்ன ரஜினி எலோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகி விட்டார் . அவரது அயன் படம் படு கமர்சியல் ஹிட். ஹாரிஸ் ஜெயராஜுடன் நம்ம சூர்யா தொடர்ந்து மூன்றாவது வெற்றி தர தயார்.
எனவே ஆதவன் இன்னொரு அயன் என்பதில் சந்தேகமே இல்லை. நயன்தாரா
தமிழில் நல்ல இடம் மீண்டும் பிடிக்க இது உதவும் .

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு எனவே கலைஞர் டிவி தரும் புப்ளிசிட்டி கு அளவே இருக்காது . எனவே சூர்யா கொஞ்சம் ரிலாக்ஸ் .


பலரது விமர்சனத்துக்கு பதிலடிகொடுக்க விஜய் ரெடி வேட்டைக்காரன் தன்னை கைப்பற்றும் என நம்பிக்கை உடன் ஏ.வி .எம் தயாரிப்பில் அனுஷ்கா ஜோடியாக கலக்குவார் . அனேகமாக இது ஒரு கமர்சியல் விறுவிறுப்பான கதை தான் . ஏ. வி.எம் கலைஞர் டிவி போட்டியை சமாளிக்க சன் டிவி இடம் அயன் போல கொடுத்து விடும் என்று நம்பலாம் . இதை தவிர மேலும் தனுஷ் , ஜீவா ,கருணாஸ் நடிப்பில் அம்பானி படங்களும் வெற்றிபெற காத்திருக்கின்றன என்று எதிர் பார்க்கலாம்.

ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் .
சூர்யாவை விட விஜய் கு தன் வெற்றி மிக முக்கியம் நேற்று எனக்கு வந்த எஸ்,எம்,எஸ். ஒன்றில் வோடாபோன் விளம்பரத்தை விஜய்யை வைத்து அனுப்பினார் முதலில் ஒரு ரோபோ ரூம் உள்ளே பொய் அல்லாரி வருகிறது , உடனே தன் அருகே உள்ள மற்றொரு ரோபோ உடன் உள்ளே போகிறது , அந்த இரண்டும் அலறி வருகின்றன ,, சற்று நேரத்தில் அவை இரண்டும் தனது பெற்றோர் ரோபோஉடன் செல்கின்றன அப்போது அங்கே வில்லு படம் டிவி இல் ஓடிக்கொண்டிருக்கிறது .....


இவற்றுக்கெல்லாம் வேட்டைக்காரன் தக்க பதிலடி கொடுப்பன் என நம்பலாம் .


ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே சிறப்பாக இருக்கும்
ஒரு ஆரோகியமான போட்டி எல்லோருக்கும் தேவை.

நம்ம சுல்தான், தலையோட அசல் எப்பவருனு தெரிஞ்சா சொல்லுங்கப்பா அவங்களு தீபாவளிக்கு வந்தா எல்லோருக்கு சூப்பர் தீபாவளி இதுதா.


ஐடியா-மணி முடிவுகள்:

கொஞ்ச வருஷம் முன்னாடி நம்ம சூர்யா விஜய் மாதிரி வெறி குடுக்க ஆசைன்னு சொன்னாருனா . அத இப்ப செய்றாருநா .. கூட்டி கழிச்சி பார்த்திகன்னா வேட்டைகாரனை விட ஆதவன் தா முன்னாடி நிக்கிறாருநா .
* என்னதா விஜய் நா போட்டு பேசினாலும் எங்க ஊர் ஆதவனுக்கு தாநா என்றஓட்டு.

மறக்காம ஒங்க ஓட்ட, கமெண்ட் போடுகநா இன்னு நா இம்ப்ரூவ் பண்ணனு ..

ஆட்சியாளர்களும் ,ஊடகங்களும் (இலங்கை ) தமிழர்களும்- முதல் பகுதி

1950களில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் 1950களில் ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ. வி. அழகேசன் அப்போது நடுவணரசில் ரயில்வே அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயில் கவிழ்ந்து 20, 30 பேர் வரை பலியானார்கள். அப்பொழுது வளர்பருவத்திலிருந்த திமுக, சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது. அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்னும் வாசகங்களுடன் வெளியிடப்பட்ட அந்தச் சுவரொட்டி பரவலான கவனத்தைப் பெற்றது.

அதேபோல் 1960களின் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னைத் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962இல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது அந்தச் சம்பவத்தை முன்வைத்துச் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது திமுக. ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்திக் கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படத்துடன் கூலி உயர்வு கேட்டார் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான் என்னும் வாசகங்களுடனும் தென்பட்ட அந்தச் சுவரொட்டி துறைமுகத் தொழிலாளர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்டுத் தமிழ்நாடு முழுக்கப் பயணித்தது. அடுக்குமொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடுவது திமுகவுக்குக் கைவந்த கலை. அவற்றில் இடம்பெற்ற கருத்துப்படங்களும் கூர்மையான முழக்கங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரைப்படம், பத்திரிகை, மேடைப் பேச்சு இவற்றோடு சுவரொட்டியும் திமுகவின் வலுவான பிரச்சார ஆயுதமாக மாறியது. அப்போதிருந்த பேராயக் கட்சி அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என்பதை அறியவில்லை. சுவரொட்டிகளை அச்சிடுவதற்கோ ஒட்டுவதற்கோ எந்தத் தடையும் விதிக்கப் பட்டிருக்கவில்லை. அப்போதைய அதிகாரவர்க்கம் நேரடியான அல்லது மறைமுகமான உருட்டல், மிரட்டல்களில் ஈடுபடவில்லை. அதனால் சுவரொட்டிகளில் வெளிப்படையாக அவற்றை அச்சிட்ட அச்சகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிச் சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களின் உடல்களைக் காட்சிப்படுத்தும் சுவரொட்டிகளை அச்சிட்டு வெளியிட்டன ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஆனால் திமுக அரசும் அதிகார வர்க்கமும் அவற்றைச் சுதந்திரமாக அச்சிடுவதற்கும் ஒட்டுவதற்கும் அனுமதிக்காமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தி ஒடுக்கின. முன்பு ஒரு எதிர்ப்பு இயக்கமாகத் தான் முன்னெடுத்த போராட்ட முறைகளை இப்போதைய எதிர்ப்பு இயக்கங்கள் கைக்கொள்வதை ஆளும் வர்க்கமாக மாறிவிட்ட திமுக அரசு தடைசெய்கிறது.

மதுரையில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழினப் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர், என்னும் வாசகங்களுடன் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்டது. தமிழினப் படுகொலையை நடத்துவது சிங்கள இனவெறி அரசு என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்தியாதான் போரை நிகழ்த்துகிறது என இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் சொன்னது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லா வகையிலும் நமக்கு ஒத்துழைத்ததால்தான் நம்மால் விடுதலைப்புலிகளை ஒழிக்க முடிந்தது என டி சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். அப்படியிருக்க தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர் என்றுதானே உங்கள் சுவரொட்டியின் வாசகங்கள் இருந்திருக்க வேண்டும் எனச் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன். அப்படித் தான் போடும்படி சொன்னோம் அச்சகத்துக்காரர் மறுத்துவிட்டார் என்றார்கள். பிறகு அந்தச் சுவரொட்டி அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

ஈழப் பிரச்சினையை மையப் படுத்தி அ. மார்க்ஸ் அளித்திருந்த நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ் என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். அதில் அச்சகத்தின் பெயர் இருக்காது. ஈழப் பிரச்சினை தானே அச்சகத்தின் பெயர் வேண்டாம் எனச் சொன்னார் அச்சக உரிமையாளர். அச்சக உரிமையாளர்களுக்குக் காவல் துறை கொடுத்த நெருக்கடியே இதற்குக் காரணம்.

காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு என்னும் முழக்கம் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஈழ ஆதரவாளர்கள் முன்வைத்த முக்கியமான முழக்கமாக இருந்தது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகக் கருத்துப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்தச் சுவரொட்டியை ஒட்டியதற்காகத் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர். அச்சக உரிமையாளர்கள் இத்தகைய சுவரொட்டிகளை அச்சிட மறுத்ததால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று அவற்றை அச்சகத்தின் பெயரில்லாமல் அச்சிட்டுக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஜனநாயகம் குறித்த திமுகவின் பார்வை இரட்டைத் தன்மை கொண்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின் புரவலனாக இருந்து குரல்கொடுக்கும் திமுக, ஆளும் கட்சியாக மாறும்பொழுது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி அதை நசுக்க முயல்கிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் விருப்பங்களுக்கு எதிராகவே இருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனடியாக அவற்றை ஒளிபரப்பத் தொடங்கியது மக்கள் தொலைக்காட்சி. 12.5.09 பிற்பகலில் தொடங்கிய இந்த ஒளிபரப்பு 13.5.09 காலையில் காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டது. 12ஆம் தேதி இரவு சென்னை நகரில் ஏற்பட்ட மின்தடைக்கும் மக்கள் தொலைக்காட்சியில் இந்தக் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரி போட்டியிட்ட மதுரையில் மின்தடை இல்லைதான். அங்கு மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை கேபிள் ஆபரேட்டர்கள் துண்டித்துவிட்டனர்.

நம்ம ஊரு கோயம்புத்தூர் தாங்கோ நம்ம பசங்க லா சிங்கபூர் , துபாய் , அரேபியா னு இருக்காக

பிரபு தேவா நயன்தாரா கோயம்புத்தூரில் கும்மாளம்


கோயம்புத்தூரில் பிரபல கே . எம். சி மருத்துவமனை ல் நடந்து வரும் பிரபு தேவா பூமிகா நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது இன்று கடைசி நாள் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது .இங்கு பிரபு தேவா நயன்தாரா இருவரும் இருக்கின்றனர் . ஒன்றாக வே சுற்று கின்றனர் பட பிடிப்பும் இன்று தான் சிலருக்கு தெரிந்தது ஷங்கர் படம் போல .
கோயமுத்தூர் மக்கள் அதிசயித்தனர் இருவரின் அன்பை பார்த்து ,, நீ இன்றி நான் இல்லை என் காதல் பொய் இல்லை என்ற பாடல் தன் நினைவிற்கு வருகிறது ..

இதுதான் கோவை இன் ஹாட் நியூஸ் .....

உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர் யார் ? இங்க வந்து ஒட்டு போடுங்க ....

visitors




widgets

visitors

அஜீத்துக்கும் பாட்டெழுதுவீரா அவ்வையே?

கல்லூரி என்றாலே கலாட்டாதான். அதில் கொஞ்சம் இலக்கியத் தன்மையும் இருந்தால் ருசிகரமாகத்தான் இருக்கும். அதற்கான முஸ்தீபுகளோடு நவீன கால "அவ்வை'யுடன் பிராட்வேயில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஒரு விசிட் அடித்தோம். அது கல்லூரி இடைவேளை நேரம்.நவீன கால அவ்வையைக் கண்டதும் ஒரு பட்டாளம் சூழ, அங்கு ஒரு விவாதமே அரங்கேறத் தொடங்கியது. சரண்யா: அந்தக் காலத்துல அவ்வையார் என்று பெயரை மாற்றியது போல, இந்தக் காலத்தில் உங்கள் பெயர்? அவ்வை: சங்க காலத்தில் "அவ்வை'யார். நவீன காலத்தில் ஒ-ள-வை-யார். ஷாலினி: சங்க இலக்கியத்தில் கலைஞர்களை அரசர்களைப் பற்றி பாடியது போல், தற்காலத்தில் அஜித், விஜய்யைப் பற்றி பாடல் எழுத முடியுமா? அவ்வை: தல என்றும் தளபதி என்றும் அவர்களைப் பற்றித்தான் ஏற்கெனவே படங்களுக்காகக் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்களே? அர்ச்சனா: சுட்ட பழம் சாப்பிட்டது பற்றி..? அவ்வை: ரொம்ப சூடா இருந்துச்சு.

ஸ்ருதி: அந்தக் காலத்துல உங்கள் பாடலுக்கு கே.பி.சுந்தராம்பாள் குரல் கொடுத்தது போல, இந்தக் காலத்துல யாரு குரல் கொடுத்தா பொருத்தமா இருக்கும்? அவ்வை: தற்காலத்தில் பாடகி சுசிலாதான் என் குரலுக்கு மெருகேற்றுவார். இந்துமதி: அதியமானிடம் நெல்லிக்கனியை பெற்றது பற்றி? அவ்வை: பெற்றவர் மட்டுமில்லை, கொடுத்தவரும்தான் இறவா புகழோடு இன்னமும் நம் நெஞ்சினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. பத்மாவதி: ஆத்திச்சூடியை தலைகீழாகக் கூற முடியுமா? அவ்வை: முதலில் நீங்கள் ஆத்திச்சூடியை நேராக கூறுங்கள். பிறகு நான் தலைகீழாகக் கூறுகிறேன். ஸ்ருதி: செம்மொழியில் உள்ள தமிழ்மொழியை அதிகம் பேர் பயிலா நிலை தற்போது ஏற்படுகிறதே? அவ்வை: சிறுவயதில் தமிழில் நாம் "அம்மா' என்ற வார்த்தையையே முதலில் கற்கிறோம். ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கு மம்மி, டாடி என்ற போன்ற வார்த்தைகளையே பெற்றோர் கற்பித்தால் எவ்விதத்தில் செம்மொழியைப் பேணிக்காக்க முடியும்? ஷாலினி: தமிழில் வெளிவந்த "தமிழ் எம்.ஏ.,' திரைப்படத்தில்கூட தமிழ் படித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்று தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்களே? அவ்வை: நாம் இன்ன படித்தால் தான் இந்த நிலைக்கு வரமுடியும் என்பதில்லை, கடவுள் நம் அனைவருக்கும் சமமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் முறையாகப் புரிந்து செயல்பட்டால் எந்த நிலையையும் அடைந்திட முடியும்.

பாரதி: சங்க காலத்தில் தோன்றிய நல்ல இலக்கியங்களைப் போல தற்காலத்தில் தோன்றாததற்குக் காரணம்? அவ்வை: காலம் தோறும் இலக்கிய உத்திகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்றும் உலக இலக்கியங்களுக்கு ஒப்பான இலக்கியங்கள் தமிழில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. தனலெட்சுமி: அதியமானிடம் நீங்கள் பாராட்டிய நட்பைப் போல, தற்காலத்தில் உங்கள் நட்பு யாருடன் தொடர விரும்புகிறீர்கள்? அவ்வை: செம்மொழியை பேணிக்காக்கும் முதல்வர் கலைஞர்தான் என் நட்புக்குரியவர். ஃபாமிதா: புறாக்கள் மூலம் தூது விட்டு, தற்போது செல்போன் மூலம் எஸ்எம்எஸ் பரவுகிறதே? அவ்வை: வானில் பறக்கும் வானூர்தியையும், மிதக்கும் கப்பலையும் கண்டுபிடித்தவர்களுக்கு உணவாக பறவைகள் இறையாகும் போது, எங்கிருந்து அவற்றைக் கொண்டு தூதுவிட முடியும் என்பதால்தான் தொ(ல்)லைபேசியைக் கண்டுபிடித்தனர். இது செல்விடு தூது காலம். புவனேஸ்வரி: பெண்களுக்குச் சமகால உரிமை வேண்டும் என்பது அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா? அவ்வை: நிச்சயமாக. என்னைப் போல் பல பெண்கவிஞர்கள் அப்போது இருந்தனரே. அர்ச்சனா: ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்பது பற்றி உங்கள் கருத்து? அவ்வை: உரிமை என்பது ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்ப்பது அல்ல. கலைவாணி: நீங்கள் காவி உடை அணிந்து காவியம் படைத்தீர்கள். தற்போது உடையில்கூட பெண்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறதே? அவ்வை: ஆடை அணிவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அபிராமி: உங்களுக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன வேடத்தில நடிப்பீர்கள்? அவ்வை: நான் பெண்பாற் கவிஞராகவே விரும்புகிறேன். கீதீகா: அப்படியென்றால் இந்தக் கால இளைஞர்களுக்கு உங்கள் கவிதை மூலம் உணர்த்துவது? அவ்வை: குட்ட குட்ட குனிந்து இரு.. உடையும் நிலை வந்தால் நிமிர்ந்து விடு. சபாஷ் அவ்வையே -என எல்லோரும் சேர்ந்து சல்யூட் வைக்க, பதிலுக்கு அவ்வை வைத்தார் அட்டகாசமான சல்யூட்!

ஹிட்லரின் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை



ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.