Tuesday, June 30, 2009

விஜய் சூர்யா முந்துவது யார் ? ஐடியா மணி



"வேட்டைக்கரனா ,ஆதவனா தீபாவளி போட்டி"



அடுத்தடுத்து தொடர் வெற்றிகளால் சூர்யா நடிப்பில் ஆதவன் , அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் விஜய் வெற்றியை நோக்கி வேட்டைக்காரனாக வருகிறார் தன்னை நிரூபிக்க . இரண்டு பட விளம்பரங்களும் மிரட்டலாக உள்ளன உங்களுக்காக அவை இங்கே இணைத்துள்ளேன் .அவற்றை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.



இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மகத்தான விருந்துதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.
சூர்யா உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ் . ரவிக்குமார் டிரக்சனில் நயன்தாரா உடன் வருகிறார் . கே.எஸ் .ரவிக்குமார் படங்கள் அனைத்தும் நிறைவான வெற்றியை பெரும் என்பது எல்லோருக்கும் தெரியும் . இது கண்டிப்பாக வித்தியாசமான கதை சூர்யா வில்லன் போல ஹீரோ .சூர்யா இப்ப தமிழ் நாட்டின் சின்ன ரஜினி எலோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகி விட்டார் . அவரது அயன் படம் படு கமர்சியல் ஹிட். ஹாரிஸ் ஜெயராஜுடன் நம்ம சூர்யா தொடர்ந்து மூன்றாவது வெற்றி தர தயார்.
எனவே ஆதவன் இன்னொரு அயன் என்பதில் சந்தேகமே இல்லை. நயன்தாரா
தமிழில் நல்ல இடம் மீண்டும் பிடிக்க இது உதவும் .

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு எனவே கலைஞர் டிவி தரும் புப்ளிசிட்டி கு அளவே இருக்காது . எனவே சூர்யா கொஞ்சம் ரிலாக்ஸ் .


பலரது விமர்சனத்துக்கு பதிலடிகொடுக்க விஜய் ரெடி வேட்டைக்காரன் தன்னை கைப்பற்றும் என நம்பிக்கை உடன் ஏ.வி .எம் தயாரிப்பில் அனுஷ்கா ஜோடியாக கலக்குவார் . அனேகமாக இது ஒரு கமர்சியல் விறுவிறுப்பான கதை தான் . ஏ. வி.எம் கலைஞர் டிவி போட்டியை சமாளிக்க சன் டிவி இடம் அயன் போல கொடுத்து விடும் என்று நம்பலாம் . இதை தவிர மேலும் தனுஷ் , ஜீவா ,கருணாஸ் நடிப்பில் அம்பானி படங்களும் வெற்றிபெற காத்திருக்கின்றன என்று எதிர் பார்க்கலாம்.

ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் .
சூர்யாவை விட விஜய் கு தன் வெற்றி மிக முக்கியம் நேற்று எனக்கு வந்த எஸ்,எம்,எஸ். ஒன்றில் வோடாபோன் விளம்பரத்தை விஜய்யை வைத்து அனுப்பினார் முதலில் ஒரு ரோபோ ரூம் உள்ளே பொய் அல்லாரி வருகிறது , உடனே தன் அருகே உள்ள மற்றொரு ரோபோ உடன் உள்ளே போகிறது , அந்த இரண்டும் அலறி வருகின்றன ,, சற்று நேரத்தில் அவை இரண்டும் தனது பெற்றோர் ரோபோஉடன் செல்கின்றன அப்போது அங்கே வில்லு படம் டிவி இல் ஓடிக்கொண்டிருக்கிறது .....


இவற்றுக்கெல்லாம் வேட்டைக்காரன் தக்க பதிலடி கொடுப்பன் என நம்பலாம் .


ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே சிறப்பாக இருக்கும்
ஒரு ஆரோகியமான போட்டி எல்லோருக்கும் தேவை.

நம்ம சுல்தான், தலையோட அசல் எப்பவருனு தெரிஞ்சா சொல்லுங்கப்பா அவங்களு தீபாவளிக்கு வந்தா எல்லோருக்கு சூப்பர் தீபாவளி இதுதா.


ஐடியா-மணி முடிவுகள்:

கொஞ்ச வருஷம் முன்னாடி நம்ம சூர்யா விஜய் மாதிரி வெறி குடுக்க ஆசைன்னு சொன்னாருனா . அத இப்ப செய்றாருநா .. கூட்டி கழிச்சி பார்த்திகன்னா வேட்டைகாரனை விட ஆதவன் தா முன்னாடி நிக்கிறாருநா .
* என்னதா விஜய் நா போட்டு பேசினாலும் எங்க ஊர் ஆதவனுக்கு தாநா என்றஓட்டு.

மறக்காம ஒங்க ஓட்ட, கமெண்ட் போடுகநா இன்னு நா இம்ப்ரூவ் பண்ணனு ..

ஆட்சியாளர்களும் ,ஊடகங்களும் (இலங்கை ) தமிழர்களும்- முதல் பகுதி

1950களில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் 1950களில் ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ. வி. அழகேசன் அப்போது நடுவணரசில் ரயில்வே அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயில் கவிழ்ந்து 20, 30 பேர் வரை பலியானார்கள். அப்பொழுது வளர்பருவத்திலிருந்த திமுக, சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது. அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்னும் வாசகங்களுடன் வெளியிடப்பட்ட அந்தச் சுவரொட்டி பரவலான கவனத்தைப் பெற்றது.

அதேபோல் 1960களின் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னைத் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962இல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது அந்தச் சம்பவத்தை முன்வைத்துச் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது திமுக. ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்திக் கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படத்துடன் கூலி உயர்வு கேட்டார் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான் என்னும் வாசகங்களுடனும் தென்பட்ட அந்தச் சுவரொட்டி துறைமுகத் தொழிலாளர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்டுத் தமிழ்நாடு முழுக்கப் பயணித்தது. அடுக்குமொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடுவது திமுகவுக்குக் கைவந்த கலை. அவற்றில் இடம்பெற்ற கருத்துப்படங்களும் கூர்மையான முழக்கங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரைப்படம், பத்திரிகை, மேடைப் பேச்சு இவற்றோடு சுவரொட்டியும் திமுகவின் வலுவான பிரச்சார ஆயுதமாக மாறியது. அப்போதிருந்த பேராயக் கட்சி அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என்பதை அறியவில்லை. சுவரொட்டிகளை அச்சிடுவதற்கோ ஒட்டுவதற்கோ எந்தத் தடையும் விதிக்கப் பட்டிருக்கவில்லை. அப்போதைய அதிகாரவர்க்கம் நேரடியான அல்லது மறைமுகமான உருட்டல், மிரட்டல்களில் ஈடுபடவில்லை. அதனால் சுவரொட்டிகளில் வெளிப்படையாக அவற்றை அச்சிட்ட அச்சகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிச் சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களின் உடல்களைக் காட்சிப்படுத்தும் சுவரொட்டிகளை அச்சிட்டு வெளியிட்டன ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஆனால் திமுக அரசும் அதிகார வர்க்கமும் அவற்றைச் சுதந்திரமாக அச்சிடுவதற்கும் ஒட்டுவதற்கும் அனுமதிக்காமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தி ஒடுக்கின. முன்பு ஒரு எதிர்ப்பு இயக்கமாகத் தான் முன்னெடுத்த போராட்ட முறைகளை இப்போதைய எதிர்ப்பு இயக்கங்கள் கைக்கொள்வதை ஆளும் வர்க்கமாக மாறிவிட்ட திமுக அரசு தடைசெய்கிறது.

மதுரையில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழினப் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர், என்னும் வாசகங்களுடன் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்டது. தமிழினப் படுகொலையை நடத்துவது சிங்கள இனவெறி அரசு என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்தியாதான் போரை நிகழ்த்துகிறது என இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் சொன்னது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லா வகையிலும் நமக்கு ஒத்துழைத்ததால்தான் நம்மால் விடுதலைப்புலிகளை ஒழிக்க முடிந்தது என டி சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். அப்படியிருக்க தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர் என்றுதானே உங்கள் சுவரொட்டியின் வாசகங்கள் இருந்திருக்க வேண்டும் எனச் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன். அப்படித் தான் போடும்படி சொன்னோம் அச்சகத்துக்காரர் மறுத்துவிட்டார் என்றார்கள். பிறகு அந்தச் சுவரொட்டி அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

ஈழப் பிரச்சினையை மையப் படுத்தி அ. மார்க்ஸ் அளித்திருந்த நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ் என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். அதில் அச்சகத்தின் பெயர் இருக்காது. ஈழப் பிரச்சினை தானே அச்சகத்தின் பெயர் வேண்டாம் எனச் சொன்னார் அச்சக உரிமையாளர். அச்சக உரிமையாளர்களுக்குக் காவல் துறை கொடுத்த நெருக்கடியே இதற்குக் காரணம்.

காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு என்னும் முழக்கம் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஈழ ஆதரவாளர்கள் முன்வைத்த முக்கியமான முழக்கமாக இருந்தது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகக் கருத்துப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்தச் சுவரொட்டியை ஒட்டியதற்காகத் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர். அச்சக உரிமையாளர்கள் இத்தகைய சுவரொட்டிகளை அச்சிட மறுத்ததால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று அவற்றை அச்சகத்தின் பெயரில்லாமல் அச்சிட்டுக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஜனநாயகம் குறித்த திமுகவின் பார்வை இரட்டைத் தன்மை கொண்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின் புரவலனாக இருந்து குரல்கொடுக்கும் திமுக, ஆளும் கட்சியாக மாறும்பொழுது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி அதை நசுக்க முயல்கிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் விருப்பங்களுக்கு எதிராகவே இருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனடியாக அவற்றை ஒளிபரப்பத் தொடங்கியது மக்கள் தொலைக்காட்சி. 12.5.09 பிற்பகலில் தொடங்கிய இந்த ஒளிபரப்பு 13.5.09 காலையில் காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டது. 12ஆம் தேதி இரவு சென்னை நகரில் ஏற்பட்ட மின்தடைக்கும் மக்கள் தொலைக்காட்சியில் இந்தக் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரி போட்டியிட்ட மதுரையில் மின்தடை இல்லைதான். அங்கு மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை கேபிள் ஆபரேட்டர்கள் துண்டித்துவிட்டனர்.

நம்ம ஊரு கோயம்புத்தூர் தாங்கோ நம்ம பசங்க லா சிங்கபூர் , துபாய் , அரேபியா னு இருக்காக

பிரபு தேவா நயன்தாரா கோயம்புத்தூரில் கும்மாளம்


கோயம்புத்தூரில் பிரபல கே . எம். சி மருத்துவமனை ல் நடந்து வரும் பிரபு தேவா பூமிகா நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது இன்று கடைசி நாள் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது .இங்கு பிரபு தேவா நயன்தாரா இருவரும் இருக்கின்றனர் . ஒன்றாக வே சுற்று கின்றனர் பட பிடிப்பும் இன்று தான் சிலருக்கு தெரிந்தது ஷங்கர் படம் போல .
கோயமுத்தூர் மக்கள் அதிசயித்தனர் இருவரின் அன்பை பார்த்து ,, நீ இன்றி நான் இல்லை என் காதல் பொய் இல்லை என்ற பாடல் தன் நினைவிற்கு வருகிறது ..

இதுதான் கோவை இன் ஹாட் நியூஸ் .....

உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர் யார் ? இங்க வந்து ஒட்டு போடுங்க ....

visitors




widgets

visitors

அஜீத்துக்கும் பாட்டெழுதுவீரா அவ்வையே?

கல்லூரி என்றாலே கலாட்டாதான். அதில் கொஞ்சம் இலக்கியத் தன்மையும் இருந்தால் ருசிகரமாகத்தான் இருக்கும். அதற்கான முஸ்தீபுகளோடு நவீன கால "அவ்வை'யுடன் பிராட்வேயில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஒரு விசிட் அடித்தோம். அது கல்லூரி இடைவேளை நேரம்.நவீன கால அவ்வையைக் கண்டதும் ஒரு பட்டாளம் சூழ, அங்கு ஒரு விவாதமே அரங்கேறத் தொடங்கியது. சரண்யா: அந்தக் காலத்துல அவ்வையார் என்று பெயரை மாற்றியது போல, இந்தக் காலத்தில் உங்கள் பெயர்? அவ்வை: சங்க காலத்தில் "அவ்வை'யார். நவீன காலத்தில் ஒ-ள-வை-யார். ஷாலினி: சங்க இலக்கியத்தில் கலைஞர்களை அரசர்களைப் பற்றி பாடியது போல், தற்காலத்தில் அஜித், விஜய்யைப் பற்றி பாடல் எழுத முடியுமா? அவ்வை: தல என்றும் தளபதி என்றும் அவர்களைப் பற்றித்தான் ஏற்கெனவே படங்களுக்காகக் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்களே? அர்ச்சனா: சுட்ட பழம் சாப்பிட்டது பற்றி..? அவ்வை: ரொம்ப சூடா இருந்துச்சு.

ஸ்ருதி: அந்தக் காலத்துல உங்கள் பாடலுக்கு கே.பி.சுந்தராம்பாள் குரல் கொடுத்தது போல, இந்தக் காலத்துல யாரு குரல் கொடுத்தா பொருத்தமா இருக்கும்? அவ்வை: தற்காலத்தில் பாடகி சுசிலாதான் என் குரலுக்கு மெருகேற்றுவார். இந்துமதி: அதியமானிடம் நெல்லிக்கனியை பெற்றது பற்றி? அவ்வை: பெற்றவர் மட்டுமில்லை, கொடுத்தவரும்தான் இறவா புகழோடு இன்னமும் நம் நெஞ்சினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. பத்மாவதி: ஆத்திச்சூடியை தலைகீழாகக் கூற முடியுமா? அவ்வை: முதலில் நீங்கள் ஆத்திச்சூடியை நேராக கூறுங்கள். பிறகு நான் தலைகீழாகக் கூறுகிறேன். ஸ்ருதி: செம்மொழியில் உள்ள தமிழ்மொழியை அதிகம் பேர் பயிலா நிலை தற்போது ஏற்படுகிறதே? அவ்வை: சிறுவயதில் தமிழில் நாம் "அம்மா' என்ற வார்த்தையையே முதலில் கற்கிறோம். ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கு மம்மி, டாடி என்ற போன்ற வார்த்தைகளையே பெற்றோர் கற்பித்தால் எவ்விதத்தில் செம்மொழியைப் பேணிக்காக்க முடியும்? ஷாலினி: தமிழில் வெளிவந்த "தமிழ் எம்.ஏ.,' திரைப்படத்தில்கூட தமிழ் படித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்று தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்களே? அவ்வை: நாம் இன்ன படித்தால் தான் இந்த நிலைக்கு வரமுடியும் என்பதில்லை, கடவுள் நம் அனைவருக்கும் சமமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் முறையாகப் புரிந்து செயல்பட்டால் எந்த நிலையையும் அடைந்திட முடியும்.

பாரதி: சங்க காலத்தில் தோன்றிய நல்ல இலக்கியங்களைப் போல தற்காலத்தில் தோன்றாததற்குக் காரணம்? அவ்வை: காலம் தோறும் இலக்கிய உத்திகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்றும் உலக இலக்கியங்களுக்கு ஒப்பான இலக்கியங்கள் தமிழில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. தனலெட்சுமி: அதியமானிடம் நீங்கள் பாராட்டிய நட்பைப் போல, தற்காலத்தில் உங்கள் நட்பு யாருடன் தொடர விரும்புகிறீர்கள்? அவ்வை: செம்மொழியை பேணிக்காக்கும் முதல்வர் கலைஞர்தான் என் நட்புக்குரியவர். ஃபாமிதா: புறாக்கள் மூலம் தூது விட்டு, தற்போது செல்போன் மூலம் எஸ்எம்எஸ் பரவுகிறதே? அவ்வை: வானில் பறக்கும் வானூர்தியையும், மிதக்கும் கப்பலையும் கண்டுபிடித்தவர்களுக்கு உணவாக பறவைகள் இறையாகும் போது, எங்கிருந்து அவற்றைக் கொண்டு தூதுவிட முடியும் என்பதால்தான் தொ(ல்)லைபேசியைக் கண்டுபிடித்தனர். இது செல்விடு தூது காலம். புவனேஸ்வரி: பெண்களுக்குச் சமகால உரிமை வேண்டும் என்பது அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா? அவ்வை: நிச்சயமாக. என்னைப் போல் பல பெண்கவிஞர்கள் அப்போது இருந்தனரே. அர்ச்சனா: ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்பது பற்றி உங்கள் கருத்து? அவ்வை: உரிமை என்பது ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்ப்பது அல்ல. கலைவாணி: நீங்கள் காவி உடை அணிந்து காவியம் படைத்தீர்கள். தற்போது உடையில்கூட பெண்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறதே? அவ்வை: ஆடை அணிவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அபிராமி: உங்களுக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன வேடத்தில நடிப்பீர்கள்? அவ்வை: நான் பெண்பாற் கவிஞராகவே விரும்புகிறேன். கீதீகா: அப்படியென்றால் இந்தக் கால இளைஞர்களுக்கு உங்கள் கவிதை மூலம் உணர்த்துவது? அவ்வை: குட்ட குட்ட குனிந்து இரு.. உடையும் நிலை வந்தால் நிமிர்ந்து விடு. சபாஷ் அவ்வையே -என எல்லோரும் சேர்ந்து சல்யூட் வைக்க, பதிலுக்கு அவ்வை வைத்தார் அட்டகாசமான சல்யூட்!

ஹிட்லரின் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை



ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.