Tuesday, June 30, 2009

இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...

கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்த வந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை,நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்த பாதகச் செயலை நடத்தியிருப்பது இலங்கை அரசு. நடந்தவற்றை ப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.



இந்தப்போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்ட வன்னித் தமிழ் மக்களும் அவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் குழாமும்தாம். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பது முகாம்களில். விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருப்போர் எழுபதாயிரம் பேர் மாத்திரம் என்று ஜனவரி மாதம் தொடங்கி இலங்கை அரசு கூறி வந்தது. அதை இந்திய அரசும் ஊடகங்களும் இப்போது இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் பேர் என்று இலங்கை அரசு ஒப்புக்கொண்டு, இவர்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நிவாரண அமைப்புகள் சென்று வர அனுமதி வேண்டும், இங்கெல்லாம் தடுப்புக்காவல் கூடாது, முகாம்களில் இருக்கும் மக்கள் வெளியே சென்று வர அனுமதி வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றமும் பிற அமைப்புகளும் கூறியிருக்கின்றன.

இந்தப்போரில் கொலையுண்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள், போராளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், யுத்தப்பிரதேசத்திலிருந்து வெளிவர இயலாமல் அவர்களுடன் சிக்கிய மக்கள் எனப்பலர். இவர்களில் ஒவ்வொரு வகையினர் பற்றியும் நிறைய எழுத முடியும்....இப்படிக் கொலையுண்டவர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் குடும்பத்தார், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பொறுப்பாளர் சூசை உள்ளிட்டோரும் இருக்கிறார்களா இல்லையா என்னும் குழப்பம் தொடர்கிறது. இது குறித்து மாறுபட்டசெய்திகள், ஹேஷ்யங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் இப்போது இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல்- அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த வார நிகழ்வுகளை, செய்திகளைச் சங்கேதமாக வாசிக்கும்போது விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள், பிராந்திய- சர்வதேச அரசியல் கட்சிகளின் பேச்சைக் கேட்டு வேறுவழியின்றி ஆயுதக் களைவுக்குத் தயரான சமயத்தில் அவர்களை இலங்கை அரசு கொலை செய்து முடித்திருப்பதாகவே கூற வேண்டும். தவிர, தற்போது இலங்கை அரசு இந்தக் கோரப்படுகொலைகளுக்கான தடயங்களையும் அழித்து வருவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகவும், திரைமறைவிலும் ராணுவ உதவி, தளவாட உதவி, நிதியுதவி என வழங்கிய நாடுகளான இந்தியா,ருஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒருபுறம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை மறுபுறம். தவிர கண்டும் காணாமல் நின்றதற்காக ஐக்கிய நாடுகள் மன்றமும் பொறுப்பு என்றே கூற வேண்டும். இதில் ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் ஒவ்வொரு வகையில் மோசமானது என்பதில் மறுகருத்துக்கே இடமில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பிடம் எத்தனையோ அறப்பிறழ்வுகள், தவறுகள், கொடூரங்கள் உண்டு. இருந்தபோதும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அமைப்பு, இலங்கை அரசு அற்ற சர்வதேச, மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயார் என்று அறிவிக்கிறது. இந்த மூன்றாம் அமைப்பு, இந்திய அரசா, நார்வேயா, அமெரிக்காவா, பிரிட்டனா இவையெல்லாம் கலந்த ஒன்றா என்பதில் குழப்பமுண்டு. இலங்கை அரசு முன் மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையயொப்பமிடப்பட்டவர், ஏ.கோபிநாதன் என்ற வெளியுறவுத்துறை அதிகாரி, இந்தத் தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத் துறையின், ஊடக உலகின் முகங்கள் எத்தகைய கொடூரம் வாய்ந்தவை, இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது இவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.

3 comments:

  1. என் முதுகெலும்பு கடந்த எட்டு மாதங்களாக வளைந்து விட்டது.என்னடான்னு
    பார்த்தா இந்த வியாதி தமிழ்நாட்டில் முக்கால் வாசி பேருக்கு இருக்கு

    என்று நிமிர்வதோ... எல்லாம் சூனியாவிற்கே வெளிச்சம் :(

    ReplyDelete
  2. இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,முத்தமிழ் வித்தவரை ஆதரித்தவன் என்பதால் தலை குனிகின்றேன் என சொல்லுங்கள் சரியாக இருக்கும்.அது என்ன இலங்கை பிரச்சனையில் அனைவரும் இப்படியாகவே கருத்து சொல்லித் திரிகின்றீர்கள்.அங்கு நடந்த அனைத்துக்கும் காரணம் இந்தியா அல்ல,மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு,அதை நடத்தும் இத்தாலி சோணியா,முட்டுக்கொடுக்கும் தி.மு.க. வால் பிடிக்கும் சிறுத்தைகள்,இதில் எங்கே இந்திய தேசம் வந்தது?தமிழன் உள்ளிட்ட பெறும்பாலான இந்திய மக்கள் தமிழருக்கு ஆதரவாகவே இருந்தனர் மாறாக தமிழருக்காக போராடுவதாக சொன்ன கட்சிகள் தான் தமிழர் அழிய காரணம்.எனவே தமிழனாக அல்லது அல்லக்கை கருணாநிதி ஆதரவாளனாக இருக்க வெட்கப்படுங்கள்

    ReplyDelete
  3. //இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,//

    வடவனிடம் தமிழர் போராட்டத்தை பற்றி பேசிப்பாருங்கள்

    ReplyDelete