Tuesday, June 30, 2009

விஜய் சூர்யா முந்துவது யார் ? ஐடியா மணி"வேட்டைக்கரனா ,ஆதவனா தீபாவளி போட்டி"அடுத்தடுத்து தொடர் வெற்றிகளால் சூர்யா நடிப்பில் ஆதவன் , அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் விஜய் வெற்றியை நோக்கி வேட்டைக்காரனாக வருகிறார் தன்னை நிரூபிக்க . இரண்டு பட விளம்பரங்களும் மிரட்டலாக உள்ளன உங்களுக்காக அவை இங்கே இணைத்துள்ளேன் .அவற்றை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மகத்தான விருந்துதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.
சூர்யா உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ் . ரவிக்குமார் டிரக்சனில் நயன்தாரா உடன் வருகிறார் . கே.எஸ் .ரவிக்குமார் படங்கள் அனைத்தும் நிறைவான வெற்றியை பெரும் என்பது எல்லோருக்கும் தெரியும் . இது கண்டிப்பாக வித்தியாசமான கதை சூர்யா வில்லன் போல ஹீரோ .சூர்யா இப்ப தமிழ் நாட்டின் சின்ன ரஜினி எலோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகி விட்டார் . அவரது அயன் படம் படு கமர்சியல் ஹிட். ஹாரிஸ் ஜெயராஜுடன் நம்ம சூர்யா தொடர்ந்து மூன்றாவது வெற்றி தர தயார்.
எனவே ஆதவன் இன்னொரு அயன் என்பதில் சந்தேகமே இல்லை. நயன்தாரா
தமிழில் நல்ல இடம் மீண்டும் பிடிக்க இது உதவும் .

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு எனவே கலைஞர் டிவி தரும் புப்ளிசிட்டி கு அளவே இருக்காது . எனவே சூர்யா கொஞ்சம் ரிலாக்ஸ் .


பலரது விமர்சனத்துக்கு பதிலடிகொடுக்க விஜய் ரெடி வேட்டைக்காரன் தன்னை கைப்பற்றும் என நம்பிக்கை உடன் ஏ.வி .எம் தயாரிப்பில் அனுஷ்கா ஜோடியாக கலக்குவார் . அனேகமாக இது ஒரு கமர்சியல் விறுவிறுப்பான கதை தான் . ஏ. வி.எம் கலைஞர் டிவி போட்டியை சமாளிக்க சன் டிவி இடம் அயன் போல கொடுத்து விடும் என்று நம்பலாம் . இதை தவிர மேலும் தனுஷ் , ஜீவா ,கருணாஸ் நடிப்பில் அம்பானி படங்களும் வெற்றிபெற காத்திருக்கின்றன என்று எதிர் பார்க்கலாம்.

ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் .
சூர்யாவை விட விஜய் கு தன் வெற்றி மிக முக்கியம் நேற்று எனக்கு வந்த எஸ்,எம்,எஸ். ஒன்றில் வோடாபோன் விளம்பரத்தை விஜய்யை வைத்து அனுப்பினார் முதலில் ஒரு ரோபோ ரூம் உள்ளே பொய் அல்லாரி வருகிறது , உடனே தன் அருகே உள்ள மற்றொரு ரோபோ உடன் உள்ளே போகிறது , அந்த இரண்டும் அலறி வருகின்றன ,, சற்று நேரத்தில் அவை இரண்டும் தனது பெற்றோர் ரோபோஉடன் செல்கின்றன அப்போது அங்கே வில்லு படம் டிவி இல் ஓடிக்கொண்டிருக்கிறது .....


இவற்றுக்கெல்லாம் வேட்டைக்காரன் தக்க பதிலடி கொடுப்பன் என நம்பலாம் .


ஆதவன் , வேட்டைக்காரன் இரண்டுமே சிறப்பாக இருக்கும்
ஒரு ஆரோகியமான போட்டி எல்லோருக்கும் தேவை.

நம்ம சுல்தான், தலையோட அசல் எப்பவருனு தெரிஞ்சா சொல்லுங்கப்பா அவங்களு தீபாவளிக்கு வந்தா எல்லோருக்கு சூப்பர் தீபாவளி இதுதா.


ஐடியா-மணி முடிவுகள்:

கொஞ்ச வருஷம் முன்னாடி நம்ம சூர்யா விஜய் மாதிரி வெறி குடுக்க ஆசைன்னு சொன்னாருனா . அத இப்ப செய்றாருநா .. கூட்டி கழிச்சி பார்த்திகன்னா வேட்டைகாரனை விட ஆதவன் தா முன்னாடி நிக்கிறாருநா .
* என்னதா விஜய் நா போட்டு பேசினாலும் எங்க ஊர் ஆதவனுக்கு தாநா என்றஓட்டு.

மறக்காம ஒங்க ஓட்ட, கமெண்ட் போடுகநா இன்னு நா இம்ப்ரூவ் பண்ணனு ..

1 comment: