Wednesday, July 1, 2009

எங்கே பிரபாகரன்? அவருக்கு பிடித்த திரைப்படம் எது?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்னும் கேள்வியை யாரிடம்கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள்வேறுபடும். பிரபாகரன் என்னும் பெயர் உலக அளவில் பரவியுள்ள தமிழ்மக்களிடமும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் ஏன் சர்வதேசத்திலும்உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் அவரவர் கொண்ட அரசியலின் பாற்பட்டது. அந்த அரசியல் பார்வைதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்னும் பதிலையும்இல்லை என்னும் பதிலையும் இப்போதைக்கு தந்து கொண்டிருக்கிறது. ஆம் எனச்சொல்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுவதுபோல இல்லை என்று சொல்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் குறித்துக்கேள்விகள் எழுப்பப்படுவது போல இல்லை என்று சொல்பவர்கள் முன்வைக்கும்தரவுகள், விளக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரபாகரன்இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சொல்பவர்கள் ஆதாரப் பூர்வமாகநிரூபிக்க முடியாததைப் போல, அவர் உயிருடன் இல்லை என்று சொல்பவர்கள்முன்வைக்கும் ஆதாரங்களும் விஞ்ஞானப் பூர்வமாக இல்லை. இரண்டுதரப்பிலுமே அனுமானங்களும், ஊகங்களும் மனவிருப்பும் இந்தக் கட்டத்தில்தாராளமாகத் தொழிற்படுகின்றன.


பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களிலொன்று
"" The Battle Of Algiers. 1954 க்கும் 1962க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரெஞ்சுஏகாதிபத்தியத்திற்கெதிராக அல்ஜீரியர்கள் நடாத்திய போராட்டங்களின்உண்மைச் சம்பவங்களின் சாயலைக்கொண்டு உருவாக்கபட்ட படம் அது. வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களிலொன்று. கில்லோபொன்ராகோவோ எனும் இத்தாலிய நெறியாளருடையது. அத்திரைப் படத்தில்அலி லா பொன்ரே என்கிற கொரில்லாப் போராளித் தலைவன் இறுதியில்கொல்லப்படுகிறான். அதற்குப் பிறகு வெடித்தெழும் வெகுஜனப் போராட்டங்கள்ஏறத்தாழ மூன்றாண்டுகளின் பின்னர் அல்ஜீரியாவுக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்கின்றன. விடுதலைப்புலிகளது பெருமளவு தலைமைகள்கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்க்கவேண்டிய புள்ளிகளிளொன்று இது.

No comments:

Post a Comment