Sunday, July 5, 2009

வீரப்பன் வாங்கிய சத்தியம்!

கோவை கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் எழுதிய, "இதயம் ஒரு கோவில்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய, "நக்கீரன்' இதழ் ஆசிரியர் கோபால், தனது வழக்கமான பாணியில் வீரப்பன் கதையை எடுத்துவிட்டார்.


அவர் பேசுகையில், "கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்கு சென்றிருந்த போது, நான், வீரப்பன், ராஜ்குமார் மூவரும் வரிசையாக படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் என்னிடம், "உன் மகளை என்ன படிக்க வைக்கப் போகிறாய்?' எனக் கேட்டான்.


நான், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்கப் போகிறேன்' என்றேன். அதற்கு வீரப்பன், "ஐ.ஏ.எஸ்., படிக்க வைக்காதே; அவ்வளவு படிச்சுட்டு, ஒண்ணுமே படிக்காத அரசியல்வாதிகள் பின்னால கை கட்டி நிற்க வேண்டியிருக்கும்.

அது வேண்டாம்; உன் மகளை டாக்டருக்கு படிக்க வை' என்றான். அதோடு விடாமல், என்னிடம், "மகளை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் என சத்தியம் வேற வாங்கிக்கொண்டான்' எனச் சொல்லி முடித்தார்.எப்படி, "ரியாக்ட்' பண்ணுவது எனத் தெரியாமல் விழித்தார், நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ்.

No comments:

Post a Comment