Tuesday, July 7, 2009

சினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிராமத்தில் வளர்ச்சிப் பணி

சண்டிகார்: அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர், கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாக அந்நாட்டு கோர்ட்டில் தெரிவித்தனர்.



பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள குரேக், சீம்னா ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஹர்ஜித் சிங் மன் மற்றும் சுக்ராஜ் சிங் தாலிவால். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், 1990ம் ஆண்டு அமெரிக்கா சென்றனர். அங்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குர்மித் சிங் பிஸ்லா என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.


இதை தொடர்ந்து, ஹர்ஜித் சிங் மன், சுக்ராஜ் சிங் தாலிவால் மற்றும் குர்மித் சிங் பிஸ்லா ஆகிய மூவரும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா இடையே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். சமீபத்தில், இவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


அங்கு இவர்கள் மூவரும், கடந்த ஐந்தாண்டுகளில், அமெரிக்காவின் பேக்கர்ஸ்பீல்டு பகுதியில் இருந்து கனடாவிற்கு 36 ஆயிரம் கிலோ கிராம் கோகைய்ன் என்னும் போதைப் பொருள் கடத்தியதாக ஒப்புக் கொண்டனர். மேலும், குர்மித் பிஸ்லா கூறியதாவது: பஞ்சாபில் உள்ள சீம்னா மற்றும் குரேக் ஆகிய கிராமங்களை சேர்ந்த மன் மற்றும் தாலிவால் இருவரும், போதைப் பொருள் கடத்தல் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, தங்களின் சொந்த கிராம முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினர். ஹர்ஜித் சிங் மன், தனது கிராம குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு அரங்கமும், மக்களுக்காக புதிய சமுதாயக் கூடம் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள் ளார் என்றார்.

1 comment:

  1. நாம்ம ஊருலயும் இந்த மாதிரி ஆளுங்க வேணும் .

    ReplyDelete