Friday, July 10, 2009

அரசியல் பிரவேசமா?; -அஜீத்


அஜீத் படங்கள் ரிலீசாகும்போது போஸ்டர், கொடி தோரணங்கள் கட்-அவுட்கள் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ரசிகர் மன்றத்தினரின் பணியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இவற்றின் செயல்பாடுகளில் மாற்றத்தை தந்து வருகிறார் அஜீத்.

தனது பிறந்த நாளின்போது மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தி அப்பணிகளை தொடர்ந்து செய்ய வைத்து வருகிறார்.ரத்த தானம், ஏழைகளுக்கு உதவி வழங்குதல் போன்ற காரியங்களிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னொருபுறம் ரசிகர் மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
அஜீத்தின் அரசியல் பிரவேசத்துக்கு இவை முன்னோடியான வேலைகள் என்று செய்தி பரவியுள்ளது. விஜய் விரைவில் அரசியலுக்குவர இருப்பதால் அஜித்தும் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர்.
இதுபற்றி அஜீத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனது ரசிகர் மன்றங்களை சீர்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறேன். ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு அவசியம் அதற்காகத்தான் இந்த காரியத்தை செய்கிறேன்.
ரசிகர்மன்றத்தை சீரமைப்பதால் நானும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று வதந்தி கிளம்பியுள்ளது.
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. கால மாற்றத்தில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நடவடிக்கைகளும் மாறுபடும்.
என்னைப் பற்றி யாராவது தவறான கருத்துகள் வெளியிட்டால் அதற்கு விளக்கம் கொடுப்பது இல்லை. இபபோது மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன்.
இவ்வாறு அஜீத் கூறினார்.

No comments:

Post a Comment