Wednesday, July 15, 2009

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்

"குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுவது, சட்டப்படி குற்றம். குடிபோதையில் வாக னத்தை ஓட்டக் கூடாது...' இதுபோன்று அரசு மற்றும் போக்கு வரத்து போலீஸ் வட்டாரம் அறி வுறுத்துகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தவறு செய்பவர்கள் திருந்துவதாக இல்லை. இதற்கு சாட்சியாக விளங்குவது மதுக்கடை மற்றும் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களே.


சரக்கை ஏற்றிக் கொள்ள வாகனத்தில் வருபவர்கள், போதையுடன் வெளியே வந்து வண்டியைத் தள்ளிக் கொண்டா போவர்! குறிப்பாக, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், சமயங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாவதையும் கண் கூடாக பார்க்கலாம்.


குடிபோதையில் இருவர், மூவராக பைக்கில் ஏறி, பெரும் இரைச்சலுடன் ஓட்டுகின்றனர். இவர்களை பார் வாசலிலேயே கண்காணித்து, வெளியில் வந்து வாகனத்தை எடுத்தவுடன் கையும், களவுமாக பிடிக்கலாம்.


இதை தடுக்க வேண்டுமென்றால், வாகனத்தை பறிமுதல் செய்யலாம் அல்லது தண்டனையை அதிகரிக்கலாம். அப்போதுதான், சாலையை உபயோகிக்கும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு நேராது.

No comments:

Post a Comment