Saturday, July 18, 2009

வெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி

ஒரு கமெடி படம் பாக்கலான்னு நம்ம காந்திபுரம் குமரன் தியேட்டேர் ல வெடிகுண்டு முருகேசன் பார்க்க மாலை காட்சி போனேன் நண்பன் சிவா வுடன் . கூட்டம் சுமாராக இருந்தது , இப்ப படத்துக்கு போகலாம்


பசுபதி கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் . அவர் ஒரு வலிப்பு நோயாளி வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் . அலெர்ட் ஆறுமுகமாக வந்து வடிவேலு சிரிக்கவைக்கிறார், பெண் போலீஸ் வேடத்தில் ஜோதிர்மயி . சீருடையில் நோட்டை குத்தி பாடல் பாடி காவல் துறை பெண் காவலர்களை கேவலபடுத்துகிறார்.

குடித்துகொண்டே பசுபதி பள்ளியில் தன்னுடன் படித்த பெண் மனநோயாளியை கப்பற்றிவருகிறார். தண்ணி அடித்து , சாராயம் தனக்காக காய்ச்சி போலீஸ் கையில் மாட்டுகிறார், ஹோம் மேட் சரக்கு ஒடம்புக்கு நல்லது என்று விளக்கம் வேறு.

பசுபதி மெசேஜ் சொல்லி வெறுப்பேற்றுகிறார் , எப்போதாவது வந்து வடிவேலு உற்சாகமூட்டுகிறார், ஜோதிர்மயி அழுது வெறுப்பேற்றுகிறார் , பாடல்கள் தினா இனிமே இப்படி வீனா போடதீங்க .


வில்லன் அந்த மனநலம் குன்றிய பெண்ணை கெடுத்து விடுகிறான் , அதை கண்டுபிடித்த பசுபதி சண்டையில் வில்லன் தடுக்கி விழுந்து அவன் கை ஆயுதத்தாலேயே சாகிறான் . இதனால் பசுபதியை அவனின் அண்ணன் கொள்ள வருகிறான் , பிறகு அந்த பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது , பிறகு வழக்கம்போல் சமாதனம் ,


ஒரு நல்ல காமெடி படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வீணடித்திருக்கிறார் கள் . பெயரை மெசேஜ் முருகேசன் அல்லது அலெர்ட் ஆறுமுகம் என வைத்திருக்கலாம் , எப்போதும் அழுது வடியும் பசுபதி ஏன்டா வந்தீங்க கேட்கிறார்


வடிவேலுவை இன்னும் சிறப்பாக அதிகமாக பயன்படுத்தி இருந்தால் நல்ல காமெடி படமாவது கிடைத்திருக்கும்.

வெடிகுண்டு முருகேசன் அல்ல வெறுப்பேற்றும் முருகேசன் .

என் நண்பன் சிவா சொன்ன கமெண்ட் இந்த படம் பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா ,









2 comments:

  1. என் நண்பன் சிவா சொன்ன கமெண்ட் இந்த படம் "பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா , "
    நச்சுன்னு இருக்கு

    ReplyDelete
  2. "பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா , "

    its true. thanks for sharing.

    ReplyDelete