Monday, July 20, 2009

ஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.தி.மு.க., முடிவு: குன்னூர் கூட்டத்தில் தீர்மானம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேனி மாவட்டம் கம்பம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மனு தாக்கல் நாளை மறுதினம் (22ம் தேதி) துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 21ம் தேதி நடக்கிறது.



இடைத்தேர்தலில் களமிறங்க அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் அவசர செயற்குழு கூட்டம் இன்று குன்னூரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் குன்னூர் விவேக் ஓட்டலில் மதியம் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன், முக்கிய நிர்வாகிகளை ஜெயலலிதா கொடநாட்டில் காலை 10 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எப்படி சந்திப்பது, ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட விஷயங்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை புறக்கணித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்ட்டது.



நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என குன்னூரில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டததில் தீர்மானம் நி‌‌றைவேற்றப்பட்டது.

இந்த வலை பக்கம் பொய் பாருங்கண்ணா

(http://jaiindia2020.blogspot.com)



1 comment:

  1. யார் வேஸ்ட்டா செலவு செய்யறது ?

    ஆனால் மக்களுக்கு இனி டி எம் கே கொடுப்பது மட்டும்தான் காசு...

    ReplyDelete