Tuesday, July 21, 2009

ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே போஸ்டர்கள் அச்சிட்டும் கூட்டங்களில் தீர்மானம் போட்டும் ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினியோ ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதன்படி நடக்கும் என்று சொல்லி பிடி கொடுக்காமலேயே நழுவுகிறார்.

இரண்டு தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்தார். பின்னர் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். என்றாவது ஒருநாள் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:-

என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.

அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்

4 comments:

  1. thanks for u r visit and comments . I think u only the blog writer to encourage like me .

    ReplyDelete
  2. நம்ப ரசினிகாந்து, அர்சியலுக்கு வர்ரத்துக்குள்ள அல்லாருக்கும் வயசு ஆய்டும் போல கீதே ?
    இனி மேட்டு அவுரு வந்து இன்னா தன பண்ண போறாரு ? அவுருக்கு அதல்லாம் புடிக்காது நைனா !!

    ReplyDelete