Thursday, July 9, 2009

வரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன ? முடியல

ஒவ் வொரு பிரஜையும், அன்றாடம் தான் வாங்குகிற பொருட்களுக்கு, எத்தனை விதமான வரிகள் கட்டுகின்றனர் எனப் பார்த் தால், தலை சுற்றி விடும். முதலில் வருமான வரி; அடுத்து விற்பனை வரி. இதற்கு சர்சார்ஜ், சுங்கவரி, வீட்டு வரி, வாகனங்களுக்கு வரி, தொழில் வரி, தண்ணீர் வரி, சாக்கடை வரி. இதுபோக, தெரிந்தும், தெரியாமலும், அனேக வரிகள். இவை அனைத்தையும் போட்டு முடித்த பின், என்ன வரி போடலாம் என, ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து, சேவை வரியை கண்டுபிடித்து, அந்த வசூல் நன்றாக நடக்கிறது.

இதற்கு மேல் மூளையை கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்து, இப்போது புதிதாக வந்திருக்கிறது, "சாலை பாதுகாப்பு வரி!' சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போருக்கு உதவும் வகையில், இந்த வரி கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. காயமடைவோர், உயி ரிழப்புகளுக்காகத் தான் ஏற்கனவே, அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சட்டை, டவுசரை பிடுங்குகிற அளவுக்கு பிரிமியம் வசூல் பண்ணி, அதன் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய வாகனங்கள் வாங்கும் போது, வாகன வரி, சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், விபத்து, மரணத்திற்கு தாராள இழப் பீடு வழங்கலாமே! இந்த சாலை பாதுகாப்பு வரி தேவையற்றது.

டாஸ்மாக் கடைகள் மூலம், பணம் கொட்டுகிறது. இதுதவிர, சாதாரண ஏழை கூட, வீடு ரிப்பேருக்கு, ஒரு மூட்டை சிமென்ட் 275 ரூபாய்க்கு வாங்கினால், இதில் அரசுக்கு, விற்பனை வரி, செஸ் வரி, சுங்க வரி, இதர வரிகள் எல்லாம், 80 ரூபாய்க்கு மேல் போய் சேருகிறது.

ஒரு மூட்டை சிமென்ட்டிலேயே இப்படி என்றால், குண்டூசி முதல் கோடி ரூபாய் மிஷின் வரை எத்தனை கோடி வசூலாகும். இந்தப் பணத்தில், அரசு ஊழியர்களை, "மனம் குளிர' வைத்துக் கொள்ள, சம்பளத்தை அள்ளிக் கொடுத் தும், இலவச "டிவி'யிலிருந்து என்னென்ன வோ கொடுத்து, அவ் வளவு செலவையும் சரிக் கட்ட இப்படியெல்லாம் வித, விதமாக வரியை கண்டுபிடித்து போடுகின்றனர்.

பெரும்பாலான இலவசங்கள், வாங்குகிறவர்கள் பாக் கெட்டிலிருந்தே எடுத்து கொடுக்கப் படுகின்றன. மேலும் கொஞ்சம் பள, பள வென ஒரு புதிய ரோடு அல் லது ரிங்ரோடு போட்டால், உடனே அங்கு டோல் கேட் வரி வசூலிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் வசூலித்தது பத்தாது என, சாலை பாதுகாப்பு வரி என்பது நியாயமற்றது. அரசு இதை, கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சுமை யை, மக்கள் மீது சுமத்தாமல் நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment