Friday, July 10, 2009

நைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்காது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க்களுக்கு செல்லும் வாகனங்களில் இலவசமாக நைட்ரஜன் வாயுவை நிரப்பலாம். இதன் மூலம் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும்.ரேஸ் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், விமானங் கள், விண்வெளி ஓடங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்களுக்கு, நைட்ரஜன் வாயு பயன் படுத்தப்படுகிறது. இவை இந்தியா உள் ளிட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாக பின்பற்றப் பட்டது.


இந்தியாவில் பொதுமக் கள் பயன்படுத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்த, மத் திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியை, பெட்ரோல் பங்க்குகளில் ஏற்படுத்த முடிவு செய்தது.கோவை, அவினாசி ரோட்டிலுள்ள ரவிச்சந் திரா, ஜெயம் அண்ட் கோ, ராம் அண்ட் கோ, சிங்காநல்லூரிலுள்ள சாந்தி கியர்ஸ், வடகோவை, உக் கடம், மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட் ரோல் பங்க்களில் நைட்ரஜன் வாயு இலவசமாக, வாகனங்களில் நிரப்பி கொடுக்கப்படுகிறது.

நைட்ரஜன் வாயுவை வாகன சக்கரங்களில் நிரப் பும் போது, அதிக மைலேஜ் கிடைக்கிறது. டயர், டியூப் ஆயுள் நீட்டிப்பதுடன், டியூப் வெடிப்பு தடுக்கப்படுகிறது.நைட்ரஜன் வாயுவில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதால், சக்கரத்தினுள் துருப் பிடிப்பது தடுக்கப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது பிடிப்புத் தன்மை (ரோடு கிரிப்) கிடைக்கிறது. பயணிப்பதற்கு சொகுசாக இருக்கும். அடிக்கடி காற்றின் அளவை சரி பார்க்க வேண் டிய அவசியம் இல்லை.'இலவசமாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வசதியை, வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

No comments:

Post a Comment