Friday, July 17, 2009

நீலகிரி மழையில் மிதக்கிறது

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,455 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதில் அதிகபட்சமாக அப்பர்பவானி பகுதியில் 501 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 454 மி.மீ, கூடலூரில் 329 மி.மீ, எமரால்டில் 283 மி.மீ, கிளன்மார்கனில் 267 மி.மீ, நடுவட்டத்தில் 190 மி.மீ, தேவாலாவில் 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய நீர்த்தேக்கங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனத்த மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்தது.தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் அமராவதி அணைக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென வேகமாக உயர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment