Thursday, November 26, 2009

அஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்

வாலி , அமர்க்களம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , தீனா என்று உச்சத்தை நோக்கி பறந்த அஜீத் எல்லார் மனதிலும் இடம் பிடித்தார் மேலும் பூவெல்லாம் உன் வாசம் எலோருக்கும் பிடித்த குடும்ப படம் .

ஹிந்தியில் ஷாருக்குடன் அசோகா என விறு விறு வென வளர்ந்தார் .

மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்க தொடங்கினர் .

அவர் நடித்த ரெட் அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்தது இந்த படத்தை பற்றி சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் தெரியும் . அஜித்துக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது ,தொடர்ந்து வந்த ராஜா சுமார்.

இன்று கூட பலரும் வாலி வரை அஜித்தான் பிடிக்கும் ரெட் வந்த பிறகு பிடிக்காது என்று சொல்வார்கள் .இத்தனை அடுத்து வந்த வில்லன் கொஞ்சம் பழைய பெயரை கொடுத்தது.

பிறகு தான் அவர் நடித்த ஆஞ்சனேயா மீண்டும் ரசிகர்களை சோதித்து பார்த்தது அடுத்து வந்த ஜனா ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பை பெற்றது ரெட்-யை விட பலத்த சறுக்கல் அஜித்துக்கு . இன்று வரை யாரும் பொறுமையாக முழுதும் பார்க்கமுடியாத படம் . இடையிடையே சுமாரான படங்களை கொடுத்தார் .



அடுத்து வந்த அட்டகாசம் மீதம் இருந்த ரசிகர்களுக்கு தீனி போட்டது , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அடுத்து வந்த ஜீ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .
அதற்கப்புறம் வந்த திருப்பதி திருப்தி கொடுத்தது ,

அடுத்து வந்த வரலாறு அஜித் முன்னேற வழிவகுத்தது , தீபாவளிக்கு வந்த ஆழ்வார் படம் போக்கிரி . தமிரபாரணி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கமுடிய வில்லை .

அடுத்து வந்த பில்லா மெகா ஹிட் இழந்த ரசிகர்களை மீது அஜித்துக்கு கொடுத்தது , தமிழில் இதுவரை வந்த ஸ்டைல்இஸ் படம் இது மட்டும்தான் . ஏகன் சுமாராக போனது .


அஜித் மட்டும் ரெட் , ஜனா ஆகிய படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் ரஜினிக்கு அருகே சென்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

2 comments:

  1. http://peenamoodi.blogspot.com/2009/11/blog-post_06.html..

    இந்தப் பதிவையும் அதில் என் கடைசி பின்னூட்டத்தையும் காண்க...

    :-)

    ReplyDelete
  2. ரெட் தோல்விப்படம்தான், ஆனால் படுதோல்வி என்று கூற முடியாது.. மற்றும் படத்தின் முக்கியமான வசனங்கள் இன்றும் சிலரால் முணுமுணுக்கப்படுகின்றன.. (உதாரணம் "அது", மற்றும் அவர் அந்த ஊர்களின் பெயரை சொல்லும்விதம்").. ஆனால் ராஜா ஒரு படுதோல்விப்படம்.. அஜித்திற்கு எதிரிகள் உருவானது ஆஞ்சனேயா மற்றும் ஜனா ஆகிய 2 படங்களால்தான்..

    ReplyDelete