Thursday, November 26, 2009

விஜய் சொந்தமாக டிவி தொடங்க விண்ணப்பம் செய்துள்ளார். சுமார் பதினைந்து கோடி தேவைப்படுவதால் ரசிகர்கள் தலா ஆயிரம் வீதம் ஒன்னரை லட்சம் பேர் தருமாறு அன்பு கட்டளை போட்டுள்ளார் . அப்போதுதான் கேபிள் ஆப்பரேட்டேர் சேனல் கொடுக்காவிட்டாலும் , தெளிவாக இல்லாவிட்டலும் அவர்கள் கேட்பார்கள் என்பதால் எந்த முடிவு செய்துள்ளார்.

அப்பா சேனல் பெயர் என்ன விஜய் டிவி ன்னு வைக்க முடியாதே .

அஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்

வாலி , அமர்க்களம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , தீனா என்று உச்சத்தை நோக்கி பறந்த அஜீத் எல்லார் மனதிலும் இடம் பிடித்தார் மேலும் பூவெல்லாம் உன் வாசம் எலோருக்கும் பிடித்த குடும்ப படம் .

ஹிந்தியில் ஷாருக்குடன் அசோகா என விறு விறு வென வளர்ந்தார் .

மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்க தொடங்கினர் .

அவர் நடித்த ரெட் அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்தது இந்த படத்தை பற்றி சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் தெரியும் . அஜித்துக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது ,தொடர்ந்து வந்த ராஜா சுமார்.

இன்று கூட பலரும் வாலி வரை அஜித்தான் பிடிக்கும் ரெட் வந்த பிறகு பிடிக்காது என்று சொல்வார்கள் .இத்தனை அடுத்து வந்த வில்லன் கொஞ்சம் பழைய பெயரை கொடுத்தது.

பிறகு தான் அவர் நடித்த ஆஞ்சனேயா மீண்டும் ரசிகர்களை சோதித்து பார்த்தது அடுத்து வந்த ஜனா ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பை பெற்றது ரெட்-யை விட பலத்த சறுக்கல் அஜித்துக்கு . இன்று வரை யாரும் பொறுமையாக முழுதும் பார்க்கமுடியாத படம் . இடையிடையே சுமாரான படங்களை கொடுத்தார் .அடுத்து வந்த அட்டகாசம் மீதம் இருந்த ரசிகர்களுக்கு தீனி போட்டது , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அடுத்து வந்த ஜீ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .
அதற்கப்புறம் வந்த திருப்பதி திருப்தி கொடுத்தது ,

அடுத்து வந்த வரலாறு அஜித் முன்னேற வழிவகுத்தது , தீபாவளிக்கு வந்த ஆழ்வார் படம் போக்கிரி . தமிரபாரணி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கமுடிய வில்லை .

அடுத்து வந்த பில்லா மெகா ஹிட் இழந்த ரசிகர்களை மீது அஜித்துக்கு கொடுத்தது , தமிழில் இதுவரை வந்த ஸ்டைல்இஸ் படம் இது மட்டும்தான் . ஏகன் சுமாராக போனது .


அஜித் மட்டும் ரெட் , ஜனா ஆகிய படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் ரஜினிக்கு அருகே சென்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Tuesday, July 21, 2009

ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே போஸ்டர்கள் அச்சிட்டும் கூட்டங்களில் தீர்மானம் போட்டும் ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினியோ ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதன்படி நடக்கும் என்று சொல்லி பிடி கொடுக்காமலேயே நழுவுகிறார்.

இரண்டு தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்தார். பின்னர் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். என்றாவது ஒருநாள் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:-

என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.

அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்

Monday, July 20, 2009

ஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.தி.மு.க., முடிவு: குன்னூர் கூட்டத்தில் தீர்மானம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேனி மாவட்டம் கம்பம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மனு தாக்கல் நாளை மறுதினம் (22ம் தேதி) துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 21ம் தேதி நடக்கிறது.இடைத்தேர்தலில் களமிறங்க அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் அவசர செயற்குழு கூட்டம் இன்று குன்னூரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் குன்னூர் விவேக் ஓட்டலில் மதியம் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன், முக்கிய நிர்வாகிகளை ஜெயலலிதா கொடநாட்டில் காலை 10 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எப்படி சந்திப்பது, ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட விஷயங்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை புறக்கணித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்ட்டது.நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என குன்னூரில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டததில் தீர்மானம் நி‌‌றைவேற்றப்பட்டது.

இந்த வலை பக்கம் பொய் பாருங்கண்ணா

(http://jaiindia2020.blogspot.com)Saturday, July 18, 2009

வெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி

ஒரு கமெடி படம் பாக்கலான்னு நம்ம காந்திபுரம் குமரன் தியேட்டேர் ல வெடிகுண்டு முருகேசன் பார்க்க மாலை காட்சி போனேன் நண்பன் சிவா வுடன் . கூட்டம் சுமாராக இருந்தது , இப்ப படத்துக்கு போகலாம்


பசுபதி கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் . அவர் ஒரு வலிப்பு நோயாளி வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் . அலெர்ட் ஆறுமுகமாக வந்து வடிவேலு சிரிக்கவைக்கிறார், பெண் போலீஸ் வேடத்தில் ஜோதிர்மயி . சீருடையில் நோட்டை குத்தி பாடல் பாடி காவல் துறை பெண் காவலர்களை கேவலபடுத்துகிறார்.

குடித்துகொண்டே பசுபதி பள்ளியில் தன்னுடன் படித்த பெண் மனநோயாளியை கப்பற்றிவருகிறார். தண்ணி அடித்து , சாராயம் தனக்காக காய்ச்சி போலீஸ் கையில் மாட்டுகிறார், ஹோம் மேட் சரக்கு ஒடம்புக்கு நல்லது என்று விளக்கம் வேறு.

பசுபதி மெசேஜ் சொல்லி வெறுப்பேற்றுகிறார் , எப்போதாவது வந்து வடிவேலு உற்சாகமூட்டுகிறார், ஜோதிர்மயி அழுது வெறுப்பேற்றுகிறார் , பாடல்கள் தினா இனிமே இப்படி வீனா போடதீங்க .


வில்லன் அந்த மனநலம் குன்றிய பெண்ணை கெடுத்து விடுகிறான் , அதை கண்டுபிடித்த பசுபதி சண்டையில் வில்லன் தடுக்கி விழுந்து அவன் கை ஆயுதத்தாலேயே சாகிறான் . இதனால் பசுபதியை அவனின் அண்ணன் கொள்ள வருகிறான் , பிறகு அந்த பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது , பிறகு வழக்கம்போல் சமாதனம் ,


ஒரு நல்ல காமெடி படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வீணடித்திருக்கிறார் கள் . பெயரை மெசேஜ் முருகேசன் அல்லது அலெர்ட் ஆறுமுகம் என வைத்திருக்கலாம் , எப்போதும் அழுது வடியும் பசுபதி ஏன்டா வந்தீங்க கேட்கிறார்


வடிவேலுவை இன்னும் சிறப்பாக அதிகமாக பயன்படுத்தி இருந்தால் நல்ல காமெடி படமாவது கிடைத்திருக்கும்.

வெடிகுண்டு முருகேசன் அல்ல வெறுப்பேற்றும் முருகேசன் .

என் நண்பன் சிவா சொன்ன கமெண்ட் இந்த படம் பார்த்தோம்னு வெளிய சொல்ல வேண்டாம் டா ,

Friday, July 17, 2009

நீலகிரி மழையில் மிதக்கிறது

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,455 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதில் அதிகபட்சமாக அப்பர்பவானி பகுதியில் 501 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 454 மி.மீ, கூடலூரில் 329 மி.மீ, எமரால்டில் 283 மி.மீ, கிளன்மார்கனில் 267 மி.மீ, நடுவட்டத்தில் 190 மி.மீ, தேவாலாவில் 120 மி.மீ மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய நீர்த்தேக்கங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனத்த மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்தது.தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் அமராவதி அணைக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென வேகமாக உயர்ந்து வருகிறது.

அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சிகாஞ்சிபுரம் அருகே தாமல் என்ற கிராமத்தில் 1919-ஆம் ஆண்டு இந்த இசைத் தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர். தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும் கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால் அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி அருண்டேல்.

இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான் அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை, கீதம், வர்ணம் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையில் வரும் நிரடான பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம் செய்தன.லய சாம்ராஜ்யத்தை கட்டி நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம் பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார்.

ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ் பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல் சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை பல்வேறு விருதுகளையும் பெற்றார்.கர்நாடக சங்கீதத்தில் லட்சியம், லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச் சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர் அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும் தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார்.

சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்; அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத் தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.வராளி ராகத்தில் தியாகராஜரின் "ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி. பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா இது ராமா'' என்று ஏங்கித் துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை வராளியின் ஜீவன் பொங்கி வழியத் தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம் பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல் நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி இந்த சங்கீத ரசவாதத்தை யார் நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப் பாடிக் கேட்கப் போகிறோம்?கடந்த நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள் கர்நாடக இசை மேடைகளில் கானமழை பொழிந்தனர்.


."நாம் இருவர்' திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில், சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது .