Tuesday, July 14, 2009

கல்வி , கட்டணம், கற்றவர் கடமை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்ட ணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டி ருப்பது இப்பொழுது தமிழகத்தில் ஒரு பெய பிரச்னையாக உருவெடுத்துள் ளது. இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத் தில் ஒரு பொதுநல வழக்கும் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தனி யார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க தமிழக அரசு, குழு அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள் ளது. தனியார் பள்ளி பிரச்னை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதைப் பற்றி பல விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ""பிரதம்'' என்ற அமைப்பு ""ஊரகப் பகுதி களில் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை'' என்ற ஓர் அறிக்கையை அகில இந்திய அளவில் வெளியிட்டு வருகிறது. 2008-ம் ஆண் டிற்கான இடைக்கால அறிக்கையை இந்த அமைப்பு ஜனவ 2009-ல் வெளியிட்டுள் ளது. அதில் பல முக்கிய விவரங்கள் உள் ளன. அண்மைக்காலத்தில் இந்தியா முழுவதிலுமே தனியார் பள்ளியில் சேரும் மாண வர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளியில் சேர்ந்த 6-14 வயதிற்கு உள்பட்ட குழந்தைக ளின் எண்ணிக்கை 2005-ல் 16.4 சதவிகித மாக இருந்தது. 2008-ல் அது 22.5 சதவிகித மாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிக ளும் 2004 - 05-ம் ஆண்டில் 11.15 சதவிகித மாக இருந்தது 2006 - 07-ல் இது 18.86 சத விகிதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளும் அதில் பயிலும் மாணவர்களும் இவ்வாறு அதிகப்பதற்கு ஒரு முக்கிய காரணம் மக்கள் மதிப்பீட்டில் தனியார் பள்ளிகள் உயர்ந்த நிலையைப் பெற்றிருப்பதுதான். மக்களிடையே தற் போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு வெற்றிய டைந்ததன் காரணமாக பல இளம் தம்பதி யர் ""நாம் இருவர், நமக்கு இருவர்'' என்ப தையும் சிலர் ""நாமிருவர் நமக்கு ஒருவர்'' என்பதையும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர். தங்கள் குழந்தைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவ தால் குடும்ப வருமானமும் அதிகத்துள் ளது. எனவே, தங்களது குழந்தைகளின் கல் விக்காக அதிகப் பணம் செலவழிக்க அவர் கள் தயாராக உள்ளனர். அவர்களது எண் ணப்படி, அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் சிறந்தவை. அதைத் தவிர உலகம யமாதலின் தாக்கத்தால் தங்களது குழந்தை களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் அவசியம் என்று கருதுகிறார்கள். இக் காரணங்களி னால் தனியார் பள்ளிகளுக்கு சமுதாயத் தில் ஓரளவு வாய்ப்பும் வசதியும் உள்ளவர் களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள் ளது. இதன் தாக்கத்தை ஏழை எளிய குடும் பங்களிலும் காண முடிகிறது. உண்மையிலேயே அனைத்து தனியார் பள்ளிகளும் சிறந்தவை என்று சொல்ல முடியாது. மிகச்சிறந்த முறையிலே சில தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அவை மொத்தத்தில் 10 சதவிகி தமே இருக்கலாம். மேலும் ஒரு மாணவனின் கல்வித் தரத்தில் பள் ளியின் பங்கு ஓரளவுக்குத்தான் முக்கியமானது. மாணவனின் இயல்பான திறன், அவனுடைய குடும்பச் சூழ்நிலை, அவன் வசிக்கும் கிராமச் சூழ்நிலை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தையின் தாயார் கல்வி அறிவு பெற்றி ருந்தால் அந்தக் குழந்தை, கல்வி அறிவு இல்லாத ஒரு பெண்ணின் குழந்தையை விட கல்வித்திறன் மிக்கதாக இருக்கும். பிர தம் அமைப்பின் ஆய்வின்படி பக்கா வீடு, மின்சார வசதி, டெலிபோன் மற்றும் இதர தகவல் தொடர்பு வசதி ஆகியவை கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஒரு குழந்தையின் கல்வித் திறன் இதர குழந் தைகளின் திறனைவிட அதிகமாக இருக்கி றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிக்குக் குறைவில்லை. அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி, சாலை வசதி, தொலைத் தொடர்பு வசதி உள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்கம் 2007-ம் ஆண்டில் வெளி யிட்டுள்ள கையேட்டின்படி தமிழ்நாட்டி லுள்ள 34,342 துவக்கப்பள்ளிகளில் (1-5 வகுப்புகள்) 24,310 பள்ளிகள் அரசுப் பள் ளிகள். 5,037 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் 4,995. மொத்தமுள்ள 8,718 நடுநிலைப் பள்ளிகளில் 6,487 அரசுப் பள்ளிகள். 1,679 அரசு உதவி பெறும் தனி யார் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனி யார் பள்ளிகள் 552தான். மொத்தமாகப் பார்த்தால் துவக்கக் கல்வி நிலையில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் எண் ணிக்கை சுமார் 13 சதவிகிதம்தான். அவற் றில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை யும் ஏறத்தாழ இதே அளவில்தான் உள் ளது. 80 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், அரசு - தனியார் பள் ளிகளைப் பற்றிய பொதுமக்களின் கருத்து அகில இந்திய நிலையை ஒட்டியே உள் ளது. அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் சென்னை மாநகராட்சிப் பள் ளிகளைப் பற்றி வெளியிட்ட செய்தியில் ஒரு தாய் கூறிய கருத்து கீழ்க்கண்டவாறு உள்ளது. ""மாநகராட்சிப் பள்ளி ஆசியர்க ளில் சிலர் குழந்தைகளின் கட்டுப்பாடான ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதால்தான் நாங்கள் தனியார் பள்ளி களை நாட வேண்டியிருக்கிறது. அவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கும் வருவ தில்லை. தனியார் பள்ளிகளில் உள்ள பல உள்கட்டமைப்பு வசதிகள் மாநக ராட்சிப் பள்ளிகளில் இல்லை. சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் போது மானதாக இல்லை.'' அகில இந்திய அளவில் இருப் பது போலவே, தமிழ் நாட்டிலும் ஒரு சில தனியார் பள்ளிகள் தான் மிகச்சிறந்த முறையில் இயங்கி வரு கின்றன.பல பள்ளிகள், சில ஆண்டுக ளுக்கு முன் கொடிய தீ விபத்து நிகழ்ந்த, கும்பகோணம் பள்ளியைப்போல்தான் உள்ளன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் ""அனைத்து தனியார் பள்ளிகளும் உயர்ந் தவை. அனைத்து அரசு பள்ளிகளும் தரம் குறைந்தவை'' என்ற ஒரு கருத்து நிலவி வரு கிறது. இந்தக் கருத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வில்லை. அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசி யர்கள் முறையான கல்வித் தகுதி பெற்றவர் கள். அதைத் தவிர கற்பிக்கும் பயிற்சி பெற் றவர்கள். அதற்கும் மேலாக தனியார் பள்ளி ஆசியர்களைவிட அதிகம் ஊதி யம் பெறுபவர்கள். அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ஏதும் கிடையாது. இல வச மதிய உணவு, இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்படுகின்றன. இருந்தபோதிலும், ஏழை பெற்றோர்கள்கூட ஏன் இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தனியார் பள்ளி யில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள்? இதைத் தீவிரமாக ஆராய வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ளதுபோல் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லை என்று ஒரு தாய் கூறுவது வியப்பை அளிக்கிறது.ஏனென் றால் எந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்துக் கும் கிடைக்காத நிதி வசதி சென்னை மாந கராட்சிக்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சி தற்போது ஒவ் வோர் ஆண்டும் சுமார் 70 கோடி ரூபாய் துவக்கக் கல்வி வயாக, சொத்து வ செலுத்துபவடமிருந்து வசூலிக்கிறது. அவ்வாறு வசூலித்து முழுவதும் செலவ ழிக்கப்படாமல் 1-4-2009 அன்று கையிருப் பில் உள்ள தொகை சுமார் ரூ. 120 கோடி யாகும். சென்னை மாநகராட்சி சுமார் 300 பள்ளி களை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 250 பள்ளிகள் துவக்க நடுநிலைப் பள்ளி கள்தான். தற்போது மாநகராட்சி கையி ருப்பில் உள்ள தொகையைக் கொண்டு 300 பள்ளிகளிலும் தலா ரூ. 40 லட்சம் வீதம் உள்கட்டமைப்பு வசதிக்காக உடனடியா கச் செலவழிக்கலாம். அதைத் தவிர வசூ லிக்கும் துவக்கக் கல்வி வயைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு பள்ளிக் கும் ரூ. 20 லட்சம் செலவு செய்யலாம். இவ்வாறு செய்தால் எந்தத் தனியார் பள் ளியிலும் கிடைக்காத வசதிகளை மாநக ராட்சிப் பள்ளிகளில் செய்து கொடுக்க முடியும். மாநகராட்சி இதைச் செய்யவில்லை என் பதுதான் வருந்தத்தக்க விஷயம். அதை விட வருந்தத்தக்கது ""ஏன் அவ்வாறு செய் யவில்லை'' என்று மாநகராட்சியை மன்ற உறுப்பினர்களோ அல்லது வசெலுத்தும் குடிமக்களோ கேட்கவில்லை என்பதே. சென்னையில் மட்டுமல்ல இந்த நிலை. தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிக ளிலும் இதே நிலைதான். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் 1-4-2008 அன்று கையிருப்பில் இருந்த துவக்கக் கல்வி வ நிதி சுமார் ரூ. 53.57 கோடியா கும்.இந்த நிலை திடீரென்று ஏற்பட்ட தல்ல. மாநகராட்சி, கல்வித்துறை, ஆசி யர்கள், வ செலுத்தும் குடிமக்கள் ஆகி யோர் பல ஆண்டுகளாகக் காட்டிய அக்க றையின்மையினால் வந்த விளைவுதான் இது. திருநெல்வேலி மாநகராட்சியில், மாநக ராட்சியின் மையப் பகுதியில் - நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 250 மிட்டர் தொலைவில் - உள்ள மாநகராட்சி சிந்துபூந்துறை நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்புகளுக்கும் சேர்ந்து 6 மாணவர்களும் ஓர் ஆசியையும் இருக்கி றார்கள். ஏறத்தாழ ஓர் ஏக்கர் நிலப்பரப் பில் இந்தப் பள்ளி இருக்கிறது. ஒரு காலத் தில் 400 - 500 மாணவர்கள் படித்த பள்ளி தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இதை விட வருந்தக்கூடிய விஷயம் இந்தப் பள் ளிக்கு எதிலேயே அண்மையில் தொடங் கப்பட்ட தனியார் பள்ளியில் பல மாண வர்கள் படிக்கிறார்கள். இந்த மாநகராட் சிப் பள்ளியை இடித்து அங்கு ஒரு திரு மண மண்டபம் கட்டுவதற்கான ஆலோச னையும் பசீலிக்கப்பட்டது. சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் இருந்த ஒரு மாநகராட் சிப் பள்ளியை இடித்துவிட்டுத்தான் அங்கு பிட்டி தியாகராயர் கலையரங்கம் கட்டப் பட்டுள்ளது. மேற்சொன்ன அவலநிலை தமிழ்நாட் டில் சுமார் 20 - 25 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளியைப் பொறுத்தமட்டில் கிராம ஊராட்சிக்கு அதற்கான பொறுப்பும், உமையும் அளிக் கப்பட வேண்டும். ஆசியர்களும் தங்க ளது தகுதி, பயிற்சி, ஊதியம் ஆகியவற் றுக்கு ஏற்ப அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கல்வித்துறை அரசுப் பள்ளியை புகழ் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு இணை யான தரத்துக்குக் கொண்டு வருவதைப் பற்றி சிந்தித்து சீய முயற்சிகளை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அந்தந் தப் பகுதியிலுள்ள படித்தவர்கள் தத்தம் பகுதியில் உள்ள அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்குவது பற்றி ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment